இந்த சீக்ரெட்டையெல்லாம் ஸ்மார்ட்போன் வாங்கும்போது பாருங்கள்.!

ஒரு ஸ்மார்ட்போனை வாங்கும் போது, அது எந்த அளவிலான ரேம் கொண்டுள்ளது? எப்படியான கேம் கொண்டுள்ளது? வாரன்டி என்ன? கேரண்டி என்ன? சர்வீஸ் சென்டர் எங்கெல்லாம் உள்ளது? எந்த வகை சார்ஜர் கொண்டு வரும்? ஹெட்செட் இலவசமாக வருமா? இப்படி பல தரப்பட்ட கேள்விகளை நாம் கேட்போம்; அதற்கான பதில்களையும் ஸ்மார்ட்போன் விற்பனையாளர் பக்கத்திலிருந்து பெறுவோம்.

உங்கள் கையில் இருக்கும் ஸ்மார்ட்போன் கொண்டு “இதெல்லாம்” செய்ய முடியுமென்று கூறினால் முதலில் நம்பமாட்டீர்கள். ஆனால் வழிமுறைகளை அறிந்த பின்னர் விடாமல் செய்து பார்ப்பீர்கள்.

க்ளோனிங் ஆப்ஸ்.!

ஆண்ட்ராய்டின் புதிய பதிப்பில், “ஆப் க்ளோனர்” என்று அழைக்கப்படும் மெனு விருப்பம் உள்ளது. இதனை கொண்டு நீங்கள் விரும்பும் ஆப்பின் ஒரு க்ளோனிங்கை, அதாவது ஒரு நகலை உருவாக்க முடியும்.

வெவ்வேறு அக்கவுண்ட்களின் வழியாக சமூக ஊடகங்களை அடிக்கடி அணுகும் மக்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும். இந்த அம்சத்திற்கு ஆதரவளிக்காத ஆண்ட்ராய்டு பதிப்பு கொண்ட பயனர்கள், குளோனிங்களுக்கான ஒரு சிறப்பு பயன்பாட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

டிஜிட்டல் ஸ்கேல்.!

உங்கள் ஸ்மார்ட்போனை கொண்டு சில சிறிய பொருள்களை எடைபோடலாம். ஒரு எடுத்துக்காட்டிற்கு மளிகை கடைகளில் வாங்கியதொரு சிறிய பொருளின் எடை மீது உங்களுக்கு சந்தேகம் எழுகிறதென்றால் வெறுமனே இந்த பயன்பாட்டை நிறுவி, அதன் எடை சரியாக உள்ளதா என்பதை சரிபார்த்துக்கொள்ளலாம்.

டூ விண்டோ மோட்.!

ஒரே டிஸ்பிளேயில் இரண்டு ஸ்க்ரீனை ஓப்பன் செய்ய, மல்டி விண்டோ மோட் பயன்முறையை இயக்கவும். இதைச் செய்ய, சரியான பயன்பாட்டைத் திறந்து, டாஸ்க் லிஸ்ட் பொத்தானை அழுத்தி ஹோல்ட் செய்யவும் (அதாவது ஹோம் பொத்தானின் வலதுபுறத்தில் இருக்கும் பொத்தான்) துரதிருஷ்டவசமாக, இந்த பயன்முறை அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் இயங்காது.

ஆஃப்லைன் மேப்ஸ்.!

ரோமிங் செய்யும் போது மொபைல் இணையத்தை பயன்படுத்துவது மிகவும் விலை உயர்ந்த ஒரு காரியமாகும். ஒருவேளை உங்களின் டேட்டா தீர்ந்துவிட்டால் நிலைமை இன்னும் மோசமாகிவிடும் அல்ல.? இந்த நேரத்தில் கூகுள் மேப்ஸ் பயன்படுத்துவதென்பது முடியாத காரியமாகிவிடும்.

ஆக எங்கும் கிளம்பும் முன்னரே, ஆன்லைன் மேப்ஸ்களை உங்கள் போனில் பதிவிறக்கம் செய்துவிட்டு, ஜிபிஎஸ் அம்சத்தை எனேபிள் செய்த மறுகையில் மொபைல் இணையத்தை ஆப் செய்யவது தான் இதற்கு ஒரு சிறந்த தீர்வாகும். .

ஸ்மார்ட்போன் டூ ஸ்மார்ட்போன்.!

முதலில் ஒன்-டச்-கோ (OTG)  கொண்டு எந்தவொரு ஸ்மார்ட்போனையும் மற்றொரு நவீன சாதனத்துடன் இணைக்க முடியும், மற்றொரு ஸ்மார்ட்போன் உட்பட.  யூஎஸ்பி பீமேல் அடாப்டர் கொண்டும் மற்றொரு ஸ்மார்ட்போன் ஒரு மைக்ரோ- யூஎஸ்பி கேபிள் கொண்டும் இணைந்திருக்க வேண்டும்.

 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment