அடடே..!இலவசமாக ஃப்ரீ டிஷ் வழங்க முடிவு செய்துள்ளது இந்நிறுவனம்..!

 

பிரசார் பாரதி, இன்னும் ஒரு சில வாரங்களில் டைரக்ட் டூ ஹோம் (டிடிஎச்) டிடி ஃப்ரீ டிஷ் என்கிற சேவையை இலவசமாக வழங்குவதற்கான ஒரு புதிய கொள்கை வெளிப்படுத்தி உள்ளது.

இந்த கொள்கையை, டெலிகாம் டிஸ்ப்யூட்ஸ் செட்டில்மென்ட் அண்ட் அப்பெல்லேட் ட்ரிபூனல் (டிடிஎஸ்ஏடி – Telecom Disputes Settlement and Appellate Tribunal ) நீதிமன்றத்திடம் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எந்த விதமான புதிய கொள்கைகளும் இல்லாமல் ஸ்லாட் ஏலங்களை திரும்ப பெற்றுக்கொண்டதின் விளைவாக தூர்தர்ஷன் மீது அதன் ஒளிபரப்பாளர்களால் ஏகப்பட்ட மனுக்கள் தொடுக்கப்பட்டது.

அது சார்ந்த விசாரணையில் தான், டிடி ஃப்ரீ டிஷ் சேவை பற்றிய விவரங்கள் வெளியிடப்பட்டு உள்ளது. ஆறு மாதங்களுக்கும் மேலாக இழுபடும் இந்த விஷயத்தில், ஒருவழியாக பிரசார் பாரதி, டிடி ஃப்ரீ டிஷ் என்கிற ஒரு புதிய கொள்கையை உருவாக்கியதின் வழியாக, அதன் “கொள்கை முடக்கம்” சார்ந்த சர்ச்சைகளுக்கு ஒரு முடிவு கிடைத்துள்ளது.

பிரசார் பாரதியின் புதிய கொள்கை சமர்ப்பிப்பை தொடர்ந்து, மே 28 ஆம் தேதிக்கு வழக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதும், இதற்கிடையில் எடுக்கும் எந்த ஒரு முடிவையும் பதிவு செய்யுமாறு பிரசார் பாரதிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment