781 பயனாளிகளுக்கு நல திட்ட உதவிகளை வழங்கினார் முதல்வர் பழனிசாமி!

781 பயனாளிகளுக்கு நல திட்ட உதவிகளை வழங்கினார் முதல்வர் பழனிசாமி. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திருவாரூர் மாவட்டத்தில், கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்கிறார். கொரோனா மற்றும் வளர்ச்சி திட்ட பணிகளுக்கான ஆய்வு கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி அவர்கள் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன என்றும், அரசின் அறிவுரைக்கு ஏற்ப அதிகாரிகள் … Read more

நெல் கொள்முதல் நிலையங்களை அரசு திறக்க வேண்டும் – விவசாயிகள் கோரிக்கை

நெல் கொள்முதல் நிலையங்களை அரசு திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை. தமிழகம் முழுவதும், கொரோனா வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்த பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ராசு மேற்கொண்டு வருகிறது. அந்த  வகையில், தமிழகம் முழுவதும் மே-31 வரை அரசு ஊரடங்கு உத்தரவு நீட்டித்துள்ள நிலையில், சில  தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தாலும், இன்னும் பலர் தங்களது இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப இயலாத நிலையில் தான் உள்ளனர்.  இந்நிலையில், திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே ஆலங்கோட்டை கிராமத்தில் அறுவடை செய்யப்பட்ட … Read more

கொரோனா இல்லாத மாவட்டமானது திருவாரூர்! மகிழ்ச்சியில் மக்கள்!

கொரோனா இல்லாத மாவட்டமானது திருவாரூர். தமிழகம் முழுவதும் கொரோனா  வைரஸின் தீவிர பரவலை  கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு  வருகிறது. தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால், 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 81 பேர் இதுவரை இந்த வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்தும்  உள்ளனர். இந்நிலையில்,  திருவாரூர் மாவட்டத்தில், இதுவரை 32 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததது. அதில் 30 பேர் குணமாகி ஏற்கனவே வீடு திரும்பியுள்ள  நிலையில், … Read more

திருவாரூரில் வீட்டு பின்புற வயலில் மாணவி சடலம் கண்டெடுப்பு!

திருவாரூர்  அருகே வீட்டின் பின்புறம் உள்ள வயலில் மௌனிகா எனும் 17 வயது மாணவி காயங்களுடன் சடலமாக மீட்பு. திருவாரூரிலுள்ள மாவட்டமாகிய மகிழஞ்சேரியில் வசித்து வரும் செந்தில் குமாரின் 17 வயது பள்ளி பயிலும் மகள் தான் மௌனிகா. கிராம மக்கள் காலையில் வயலுக்கு சென்ற பொழுது மௌனிகா வயலில் சடலமாக கிடந்துள்ளார்.  அப்பொழுது ஆராய்ந்ததில் உடலில் காயங்களுடன் அவர் இறந்து கிடந்ததை அறிந்த மக்கள் வீட்டினருக்கு தகவல் அளித்துள்ளனர். இது அறிந்து அங்கு வந்த மௌனிகாவின் … Read more

இதுவரை நிவாரணம் பெறாதவர்கள் அந்தந்த ரேசன் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம் – அமைச்சர் காமராஜ்

இதுவரை நிவாரணம் பெறாதவர்கள் அந்தந்த ரேசன் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம் என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக   நிலையில், இதனை கட்டுப்படுத்த இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழக அரசு மக்களுக்கு உதவும் வகையில், ரேஷன் கடைகளில் இலவசமாக பொருட்கள் வழங்குவதாக அறிவித்திருந்த நிலையில், இந்த பொருட்கள் பலருக்கு  … Read more

முதல்வரின் அறிவுறுத்தலின் பெயரில் உடற்பயிற்சியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள்!

முதல்வரின் அறிவுறுத்தலின் பெயரில் உடற்பயிற்சியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அந்த  வகையில், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மக்கள்  அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டும் வெளியில் வரலாம் என கூறப்பட்டிருந்தது. மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர் மற்றும் தூய்மை பணியாளர்கள் அனைவரும் வெளியில் வந்து, தங்களது பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், திருவாரூர்  … Read more

திருவாரூரில் நாளை முழுமுடக்கம் ஆட்சியர் அறிவிப்பு.!

திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா பரவலைத் தடுக்க நாளை முழுமுடக்கம்  என அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் கொரோனாவால்  1,755 பேர் பாதிக்கப்பட்டு, 22 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா பரவலைத் தடுக்க நாளை முழுமுடக்கம்  என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதனால், நாளை மருந்து கடைகள் தவிர அனைத்து கடைகளும் மூடப்படும் என தெரிவித்துள்ளார்.  கொரோனா வைரஸ்  பரவலை தடுக்க சில  நகர்ப்புறங்களில் முழுமுடக்கம்  அறிவிக்கப்பட்டு உள்ளது.இதையெடுத்து, சென்னை, கோவை, மதுரை போன்ற மாநகரில் வரும் … Read more

அறுவை சிகிக்சை செய்யப்பட்ட மாணவருக்கு கொரோனா தொற்று.!

மாணவருக்கு அறுவை சிகிக்சை செய்த மருத்துவர்கள், செவிலியர்கள், உட்பட 20-க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டனர். கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்து வருகிறது.இதனால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் திருவாரூர் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிக்சை செய்யப்பட்ட மாணவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.அறுவை சிகிக்சை செய்யப்பட்ட மாணவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் அந்த மாணவனை பரிசோதனை செய்த போது கொரோனா உறுதி செய்யப்பட்டது.இதையடுத்து அறுவை சிகிக்சை செய்த மருத்துவர்கள், செவிலியர்கள், உட்பட 20-க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.  

ஒத்திவைக்கப்பட்டுள்ள திருவாரூர் பல்கலை கழக தேர்வுகள்!

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் போடப்பட்டுள்ள 144 ஊரடங்கு உத்தரவு தற்போது வரை அமலில் உள்ளதால், பல்வேறு கடைகள், கல்விக்கூடங்கள் ஆலயங்கள் என அனைத்துமே மூடப்பட்ட நிலையில் உள்ளன. இந்நிலையில், திருவாரூரில் உள்ள மத்திய பல்கலைக்கழகம் ஏற்கனவே மாணவர்களுக்கு வருகின்ற ஏப்ரல் 27-ஆம் தேதி வரை விடுமுறை அறிவித்துள்ளது. தற்போது இப்பல்கலைகழகத்தின் மூலம் நடக்கவிருந்த தேர்வுகள் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை பதிவாளர் புவனேஸ்வரி அவர்கள் அறிவித்துள்ளார். தேதியும் பல்கலைக்கழகம் என்று திறக்கப்படும் … Read more

திமுக கார்ப்பரேட் கட்சி அதிமுக மக்களுக்கான கட்சி – உணவுத்துறை அமைச்சர் பேச்சு

திருவாரூரில் நடைபெற்ற மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா பொதுக் கூட்டத்தில் பேசிய உணவுத்துறை அமைச்சர் காமராஜ், அப்போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்ன அறிவிப்பை வெளியிட போகிறார் என்ற பதட்டத்திலே மு.க.ஸ்டாலின் இருப்பதாக விமர்சித்தார். பின்னர் திமுக கட்சி பிரசாந்த் கிஷோர் தலைமையில் இயங்குகிற கார்ப்பரேட் கட்சி என்றும், அதிமுக மக்களுக்கான கட்சி என்றும் தெரிவித்தார்.