, , ,

திருவாரூரில் நாளை முழுமுடக்கம் ஆட்சியர் அறிவிப்பு.!

By

திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா பரவலைத் தடுக்க நாளை முழுமுடக்கம்  என அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால்  1,755 பேர் பாதிக்கப்பட்டு, 22 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா பரவலைத் தடுக்க நாளை முழுமுடக்கம்  என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதனால், நாளை மருந்து கடைகள் தவிர அனைத்து கடைகளும் மூடப்படும் என தெரிவித்துள்ளார்.

 கொரோனா வைரஸ்  பரவலை தடுக்க சில  நகர்ப்புறங்களில் முழுமுடக்கம்  அறிவிக்கப்பட்டு உள்ளது.இதையெடுத்து, சென்னை, கோவை, மதுரை போன்ற மாநகரில் வரும் 26 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை ஆகிய நான்கு நாட்களுக்கும், இதுபோன்று சேலம், திருப்பூர் போன்ற மாநகரில் ஏப்ரல் 26 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை ஆகிய 3 நாட்களுக்கு முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று நேற்று  முதல்வர் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Dinasuvadu Media @2023