கொரோனா இல்லாத மாவட்டமானது திருவாரூர்! மகிழ்ச்சியில் மக்கள்!

கொரோனா இல்லாத மாவட்டமானது திருவாரூர்.

தமிழகம் முழுவதும் கொரோனா  வைரஸின் தீவிர பரவலை  கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு  வருகிறது. தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால், 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 81 பேர் இதுவரை இந்த வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்தும்  உள்ளனர்.

இந்நிலையில்,  திருவாரூர் மாவட்டத்தில், இதுவரை 32 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததது. அதில் 30 பேர் குணமாகி ஏற்கனவே வீடு திரும்பியுள்ள  நிலையில், இன்று மீதம் இருந்த இரண்டு நபர்களுக்கும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இவர்களை மாவட்ட ஆட்சியர் மற்றும் மருத்துவர்கள் வழியனுப்பி  வைத்தனர்.

தற்போது திருவாரூர் மாவட்டம் கொரோனா இல்லாத மாவட்டமாக , அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே,  கோவை, தருமபுரி, ஈரோடு, நாகை மற்றும் நீலகிரி  உள்ளிட்ட மாவட்டங்கள் மீண்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.