#BREAKING: சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து .., 12-ஆம் வகுப்பு தேர்வு ஒத்திவைப்பு – மத்திய அரசு அறிவிப்பு..!

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று மோடி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில்  சிபிஎஸ்இ10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து எனவும், 12-ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாகவும் அறிவிக்கபப்ட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வேகமாக பரவி வருவதால் மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மே 4-ஆம் தேதி முதல் ஜூன் 14 ஆம் தேதி வரை நடைபெறும் நடைபெறவிருந்த சிபிஎஸ்இ பத்தாம் … Read more

#Breaking : உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கொரோனா தொற்று உறுதி

 உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கொரோனா தொற்று உறுதி.  இந்தியாவில் தற்போது கொரோன வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், பிரபலங்கள் முதல் பாமர மக்கள் வரை அனைவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர் தன்னை தனிமைபடுத்திக் கொண்டுள்ளார்.

#BREAKING: சிபிஎஸ்இ தேர்வு ஒத்திவைப்பு..? பிரதமர் மோடி ஆலோசனை..!

சிபிஎஸ்இ 10 மற்றும் 12 வகுப்பு தேர்வு ஒத்திவைப்பு தொடர்பாக  மத்திய கல்வித்துறை அமைச்சர் உடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார். இந்தியாவில் இரண்டாவது அலை கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நாள்தோறும் காரணம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இன்று மட்டும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில், மே மாதம் நடக்கும் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு ஒத்தி வைக்கக்கோரி பல்வேறு மாநிலங்களில் கோரிக்கை எழுந்துள்ளது. சிபிஎஸ்சி … Read more

அகிலேஷ் யாதவுக்கு கொரோனா..!

அகிலேஷ் யாதவுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தாக்கம் இன்னும் குறையவில்லை. இந்த கொரோனா வைரசால் தினமும் பலர் உயிரிழந்து வருகின்றனர். இந்த கொரோனா வைரஸ் காரணமாக அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் பாதிக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே கொரோனா நோயின் பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவுக்கு கடந்த பல நாட்களாக … Read more

அம்பேத்கரின் போராட்டம் ஒவ்வொரு தலைமுறையினருக்கும் ஒரு முன்மாதிரியாக தொடரும்-மோடி

இன்று பாபாசாகேப் அம்பேத்கரின் 130 வது பிறந்த நாள் அம்பேத்கர் ஜெயந்தி இந்தியாவில் சமத்துவ தினமாக அனுசரிக்கப்படுகிறது. பிரதமர் மோடி ட்வீட்:  அம்பேத்கரின் 130 வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்தினார்.இது குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். भारत रत्न डॉ. बाबासाहेब अम्बेडकर को उनकी जयंती पर शत-शत नमन। समाज के वंचित वर्गों को मुख्यधारा में लाने … Read more

தமிழ் மக்களுக்கு சித்திரை தின வாழ்த்துக்கள் தெரிவித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர்…!

தமிழ் மக்களுக்கு சித்திரை தின வாழ்த்துக்களை தெரிவித்த தலைவர்கள்.  இன்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் தமிழ் புத்தாண்டை சிறப்பாக கொண்டாடுவதுண்டு.  புத்தாண்டை முன்னிட்டு, கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்துவதுண்டு. ஒவ்வொருவரும் தங்களது வாழ்த்துக்களை பரிமாறி, வீடுகளில் விஷேசமான உணவுகளை செய்து சாப்பிடுவதுண்டு. இந்நிலையில், தமிழ் புத்தாண்டை கொண்டாடும் தமிழ் மக்களுக்கு அரசியல் பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். அந்த வகையில், பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த் ஆகியோர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். மேலும், சில தலைவர்கள் … Read more

இந்தியாவில் மீண்டும் முழு ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை -நிர்மலா சீதாராமன்

இந்தியாவில் கொரோனாவின் 2 அலை வேகமாக பரவத்தொடங்கியுள்ளது.இது குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில் இந்தியாவில் மீண்டும் முழு ஊரடங்கு செல்ல வாய்ப்பில்லை என்றும் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று தெரிவித்தார். உலக வங்கி குழுமத் தலைவர் டேவிட் மால்பாஸுடனான ஒரு காணொளி சந்திப்பில் உரையாடினார்.இந்தியாவின் வளர்ச்சிக்கான நிதி கிடைப்பதை கடன் வழங்கும் இடத்தை அதிகரிக்க சர்வதேச நிதி நிறுவனம் மேற்கொண்ட முயற்சிகளை சீதாராமன் பாராட்டினார்.  பொருளாதாரத்தை முற்றிலுமாக முடக்க அரசாங்கத்துக்கு … Read more

Big Breaking:இந்தியாவில் ஒரே நாளில் 1.85 லட்சம் பேருக்கு கொரோனா;1,026 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் ஒரே நாளில் 185,248 பேருக்கு கொரோனா,1,026 பேர் உயிரிழப்பு.மஹாராஷ்டிராவில்15 நாட்களுக்கு 144 தடை உத்தரவு. இந்தியா கொரோனா பாதிப்பில் இதுவரை இல்லாத ஒரே நாளில் உச்சகட்டமாக 185,248 பேருக்கு கொரோனா  தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் இதுவரை இந்தியாவில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  பாதிப்பு 13,871,321 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இந்தியா அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்திலும்,சிகிச்சை பெற்றுவருபவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் உலகளவில் இந்தியா 3 வது இடத்தில் உள்ளது.  கடந்த 24 … Read more

மஹாராஷ்டிராவில்15 நாட்களுக்கு 144 தடை உத்தரவு.!

மஹாராஷ்டிராவில் நாளை முதல் அடுத்த 15 நாட்களுக்கு 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.  மஹாராஷ்டிராவில் கொரோனா பரவல் மற்ற மாநிலங்களை காட்டிலும் அதிகமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மஹாராஷ்டிராவில் 60 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா நெருக்கடியைச் சமாளிக்க கடுமையான கட்டுப்பாடுகளை மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார். கடந்த ஆண்டைப் போல மாநிலத்தில் முழுமையான ஊரடங்கு இருக்காது, ஆனால் அத்தியாவசியமற்ற அனைத்து சேவைகளும் மூடப்படும் என தெரிவித்தார். நாளை இரவு … Read more

இனி மதுபானம் டோர் டெலிவரி செய்யப்படும்..!- BMC அதிரடி அறிவிப்பு..!

மதுக்கடைகளிலிருந்து,வீட்டிற்கே சென்று மதுபானம் டோர் டெலிவரி செய்யப்படுவது மற்றும் அதற்கான விதிமுறைகள் குறித்து பிரஹன் மும்பை மாநகராட்சி அறிவித்துள்ளன. மும்பையில் கொரோனோவின் தாக்கமானது நாளொன்றுக்கு 9,327பேருக்கு என்ற வீதத்தில் பரவி வருகிறது.இதனால் கொரொனோ வைரஸ் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 5,10,225ஆகும்.எனவே,கொரொனோ வைரஸ் பரவுவதைத் தடுக்க மாநராட்சி முழுவதும் தியேட்டர்கள்,கடைகள், போன்ற மக்கள்அதிகம் கூடும் பகுதிகளில் புதிய கட்டுப்பாடுகள் மற்றும் இரவு நேர ஊரடங்கை அறிவித்துள்ளது. இந்த நிலையில்,மதுக்கடைகளில் சமூக இடைவெளியின்றி மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.எனவே கடைகளில் கூட்டம் … Read more