BREAKING NEWS:காவிரி நதிநீர் தொடர்பான வழக்கில் நாளை அல்லது மே 22ம் தேதி இறுதி தீர்ப்பு! உச்சநீதிமன்றம் அதிரடி

காவிரி நதிநீர் தொடர்பான வழக்கில் நாளை அல்லது மே 22ம் தேதி இறுதி தீர்ப்பு வழங்கப்படும் என்று  உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உச்சநீதிமன்றம் தீர்ப்பு:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

காவிரி நதிநீர் தொடர்பான வழக்கில் நாளை அல்லது மே 22ம் தேதி இறுதி தீர்ப்பு வழங்கப்படும் என்று  உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

காவிரி வழக்கில் அனைத்துதரப்பு வாதம் முடிந்தது; இனி எந்ததரப்பு வாதமும் ஏற்கப்படாது என்று  உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

காவிரி விவகாரத்தில் திருத்தப்பட்ட வரைவு திட்டம் மீதான வழக்கில் நாளை மாலை 4 மணிக்கு தீர்ப்பு நாளை தீர்ப்பு வழங்காவிடில் மே 22 அல்லது 23 ஆம் தேதிகளில் தீர்ப்பளிக்கப்படும் என்று  உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது

மத்திய அரசு  தாக்கல்:

காவிரி அமைப்புக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் என்று பெயர் சூட்டப்படும் என்று  மத்திய அரசு தெரிவித்துள்ளது.

காவிரி நதி நீர் பங்கீடு குழு தொடர்பான திருத்தப்பட்ட வரைவு திட்டம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யபட்டது.

காவிரி அமைப்புக்கு ஆணையம் என்று பெயர் மாற்றி வரைவுத் திட்டத்தை தாக்கல் செய்தது மத்திய அரசு. “காவிரி நீர் மேலாண்மை ஆணையம்” என்று திருத்தப்பட்ட வரைவுத் திட்டத்தில் மத்திய அரசு கூறியுள்ளது.

கர்நாடக அரசு 2 பக்க அறிக்கை தாக்கல்:

மத்திய அரசின் வரைவு செயல் திட்டம் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு உட்பட்டதாக இல்லை.மேலும் மாநில அரசின் அதிகாரம் மற்றும் செயல்பாட்டில் தலையிடுவதாக உள்ளது என்று உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு 2 பக்க அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment