நெருங்கும் சட்டமன்ற தேர்தல் – தமிழக தேர்தல் அதிகாரி ஆலோசனை

தேர்தல் ஏற்பாடுகள் குறித்து  தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு ஆலோசனை மேற்கொண்டு வருகின்றார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளது.தற்போதைய தமிழக சட்டப்பேரவையின் காலம் வருகின்ற மே 24-ஆம் தேதியுடன் முடிவடைகிறது.வருகின்ற சட்டமன்ற தேர்தலில் கூடுதலாக 25000 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.மேலும் கொரோனா காரணமாக தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நேரம் ஒரு மணி நேரம் அதிகரிக்கப்பட உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.தேர்தலுக்கு தயாராகும் … Read more

தொடங்கிய விருப்ப மனு ! மூத்த அமைச்சர்கள் எந்த தொகுதியில் போட்டி ?

அதிமுகவில் விருப்பமனு விநியோகம் இன்று முதல் தொடங்கியது. தமிழகத்தில் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.அதிமுகவில் விருப்பமனு விநியோகம் இன்று முதல் தொடங்கியது.தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளா சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர், இன்று முதல் மார்ச் 5-ம் தேதி வரை விருப்பமனு பெற்று  பூர்த்தி செய்யலாம் என்றும், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் விருப்பமனுக்களை பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்ப மனுவுக்கு தமிழ்நாட்டில், ரூ.15,000, புதுச்சேரியில் … Read more

உயரும் விலைவாசி ! மணமக்களுக்கு பெட்ரோல் ,வெங்காயத்தை பரிசாக கொடுத்த நண்பர்கள்

திண்டுக்கல்லில் புதுமண தம்பதிக்கு வித்தியாசமான கல்யாண பரிசாக பெட்ரோல் மற்றும் சின்ன வெங்காயத்தை நண்பர்கள் வழங்கினார்கள். அண்மை காலமாக பெட்ரோல் ,டீசல் விலை உயர்ந்து வருகிறது.இதனால் பொது மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.அதே வேளையில் மறுப்புறம் வெளி மாநிலங்களில் விளைச்சல் பாதிப்பு காரணமாக சின்ன வெங்காயத்தின் விலையும் உயர்ந்துள்ளது.இது மேலும் பொதுமக்களுக்கு  அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியில் கோவிந்தராஜ் மற்றும் வினோதினி ஆகியோரின் திருமணம் நடைபெற்றது.திருமண விழாவிற்கு வந்த உறவினர்களும் நண்பர்களும் மணமக்களுக்கு … Read more

#BreakingNews : உடன்பிறப்புகள் அனைவரும் ஒன்றிணைந்து ஆட்சி அமைப்போம் – சசிகலா

விரைவில் நான் தொண்டர்களையும் பொதுமக்களையும் சந்திப்பேன் என்று சசிகலா தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி.ஜெயலலிதாவின் 73-வது பிறந்த தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.இதனால் சென்னை தியாகராயர் நகரில் உள்ள இல்லத்திலேயே இருந்து ஜெயலலிதா படத்திற்கு மரியாதை செலுத்தினார் சசிகலா. மரியாதையை செலுத்திய பின் சசிகலா பேசுகையில், 100 ஆண்டுகளுக்கு நம்முடைய ஆட்சி இருக்க வேண்டும் என்று ஜெயலலிதா கூறிச்சென்றதே நம்முடைய இலக்கு. நிச்சயமாக நீங்கள் செய்வீர்கள், நானும் துணையிருப்பேன்.விரைவில் நான் தொண்டர்களையும் பொதுமக்களையும் சந்திப்பேன்.ஜெயலலிதாவின் உண்மையான உடன்பிறப்புகள் ஒன்றிணைந்து … Read more

எடப்பாடி தொகுதியில் முதலமைச்சர் , போடியில் துணை முதலமைச்சர் போட்டி

எடப்பாடி தொகுதிக்கு முதல்வரும், போடிநாயக்கனூர் தொகுதிக்கு துணை முதல்வரும் இன்றே விருப்ப மனு அளிக்க உள்ளனர். தமிழகத்தில் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.அதிமுகவில் விருப்பமனு விநியோகம் இன்று முதல் தொடங்குகிறது.தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளா சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர், இன்று முதல் மார்ச் 5-ம் தேதி வரை விருப்பமனு பெற்று  பூர்த்தி செய்யலாம் என்றும், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் விருப்பமனுக்களை பெற்றுக் கொள்ளலாம் என்றும் … Read more

மதுரை எய்ம்ஸின் நிர்வாக இயக்குனராக ஹனுமந்த ராவ் நியமனம்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிர்வாக இயக்குனராக மங்கு ஹனுமந்த ராவ் நியமிக்கப்பட்டுள்ளார். ரூ.1,264 கோடி மதிப்பீட்டில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.பின்பு,மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2019-ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டினார். அண்மையில் மதுரையில் அமையவுள்ள ‘எய்ம்ஸ்‘ திட்ட மதிப்பீடு ரூ.2,000 கோடியாக உயர்ந்திருப்பது தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தெரியவந்தது. இந்நிலையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிர்வாக இயக்குனராக மங்கு ஹனுமந்த ராவ் நியமிக்கப்பட்டுள்ளார்.

டூல்கிட் வழக்கு : திஷா ரவிக்கு ஜாமீன் வழங்கி உத்தரவு

திஷா ரவிக்கு டெல்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.  சூழலியல் செயற்பாட்டாளர் திஷா ரவி ட்விட்டரில் விவசாயிகள் போராட்டத்திற்கான ஆதரவை திரட்டும் வகையில் ‘டூல்கிட்’டை தயாரித்ததாக டெல்லி போலீசார் புகார் தெரிவித்தனர். திஷா ரவி இந்தியாவின் மதிப்பை கெடுக்கும் வகையில் ‘டூல்கிட்’டை உருவாக்கி மற்றவர்களுடன் பகிர்ந்தார் என கூறி டெல்லி போலீசார் கடந்த பிப்ரவரி 13-ஆம் தேதி கைது செய்தனர். இதைத்தொடர்ந்து,  திஷா ரவியை 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி … Read more

டாஸ்மார்க் மூலம் 30 ஆயிரம் கோடி வருவாய் – நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் தகவல்

தேர்தலுக்கு பின் எந்த அரசு வந்தாலும் நிதி நிலையை சரி செய்ய குறைந்தது 3 ஆண்டுகள் தேவைப்படும் என்று தமிழக நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.   தமிழக சட்டப்பேரவையில் இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.இதன் பின்னர் தமிழக நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், தேர்தலுக்கு பின் எந்த அரசு வந்தாலும் நிதி நிலையை சரி செய்ய குறைந்தது 3 ஆண்டுகள் தேவைப்படும்.கடன் வாங்குவதில் ஜிடிபி மற்றும் 15ஆவது நிதிக்குழு அளித்த … Read more

தாமிரபரணி இணைப்புத் திட்டம் எப்போது முடிவடையும் ? பட்ஜெட்டில் அறிவிப்பு

தாமிரபரணி இணைப்புத் திட்டம் 2022 மார்ச் 31-ஆம் தேதிக்குள் முடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக இடைக்கால பட்ஜெட்டை துணை முதலமைச்சரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார்.அவர் தாக்கல் செய்த பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. அப்பொழுது துணை முதலமைச்சர்  ஓ.பன்னீர் செல்வம்,தாமிரபரணி இணைப்புத் திட்டம் 2022 மார்ச் 31-ஆம் தேதிக்குள் முடிக்கப்படும் என்று அறிவித்துள்ளார் .இத்திட்டத்தில் தாமிரபரணி ஆறு, கருமேனி ஆறு, நம்பியாறு, பச்சையாறு, கோரையாறு,  எலுமிச்சையாறு ஆகிய 6 நதிகள் இணைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

ரூ.84,686 கோடி கடன் வாங்க இலக்கு – நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

தமிழக அரசின் கடன் சுமை 5,70,108 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் கூடிய பேரவையில் இடைக்கால பட்ஜெட்டை துணை முதல்வரும்,நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் 11-வது முறையாக தாக்கல் செய்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், 2021 – 22 நிதியாண்டில்,ரூ.84,686 கோடி கடன் வாங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.ஒட்டுமொத்த கடன் அளவான ரூ.85,454 கோடியில் நிகர கடனாக ரூ.84,686.75 கோடி நிதி திரட்டப்படும்.தமிழக அரசின் கடன் சுமை 5,70,108 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.