ரூ.84,686 கோடி கடன் வாங்க இலக்கு – நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

தமிழக அரசின் கடன் சுமை 5,70,108 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சென்னை கலைவாணர் அரங்கில் கூடிய பேரவையில் இடைக்கால பட்ஜெட்டை துணை முதல்வரும்,நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் 11-வது முறையாக தாக்கல் செய்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், 2021 – 22 நிதியாண்டில்,ரூ.84,686 கோடி கடன் வாங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.ஒட்டுமொத்த கடன் அளவான ரூ.85,454 கோடியில் நிகர கடனாக ரூ.84,686.75 கோடி நிதி திரட்டப்படும்.தமிழக அரசின் கடன் சுமை 5,70,108 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.