#BreakingNews : அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்வு – முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

தமிழகத்தில் அரசு பணியாளர்கள் ஓய்வுபெறும் வயது 60ஆக உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.  கடந்த 23-ஆம் தேதி சென்னை வாலாஜாசாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றது. இதில், துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தனது 14-வது நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்தார். இந்த நிதி நிலை அறிக்கையில் பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து இன்று முதல் வரும் 27-ம் தேதி வரை தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும் … Read more

நிரவ் மோடியை இந்தியா கொண்டு வரும் வழக்கு ! இன்று இறுதி தீர்ப்பு

நிரவ் மோடியை இந்தியா கொண்டு வரும் வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகிறது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளை மூலம் 13 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி, கடன் தொகையை செலுத்தாமல் தப்பி ஓடியதை அடுத்து,  லண்டனில் தலைமறைவாகி இருந்த நீரவ் மோடியை கைது செய்து வாண்ட்ஸ்வொர்த் சிறையில் அடைக்கப்பட்டார்.சிறையில் உள்ள நிரவ் மோடி பலமுறை தாக்கல் செய்த ஜாமீன் … Read more

ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி செல்கிறார் பிரதமர் மோடி

 பிரதமர் மோடி தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி செல்கிறார் பிரதமர். புதுச்சேரி செல்லும் பிரதமர் மோடி காரைக்கால் மாவட்டத்தை உள்ளடக்கிய விழுப்புரம் – நாகப்பட்டினம் வரையிலான 56 கி.மீ தூரம் 4 வழி தேசிய நெடுஞ்சாலை திட்டத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார்.காரைக்கால் மாவட்டத்தில் ஜிப்மர் மருத்துவ கல்லூரி கட்டிடத்துக்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார். இத்திட்டத்தின் மதிப்பீட்டு செலவு ரூ.491 கோடி.சாகர்மாலா திட்டத்தின் கீழ் புதுச்சேரியில் சிறு … Read more

பெண்ணுக்கு நியாயம் கிடைக்க முதல்வர் ஆவண செய்ய வேண்டும் – கமல்ஹாசன்

பாலியல் தொல்லை கொடுத்ததாக வெளிவரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். பாலியல் தொல்லை தந்தாக சிறப்பு டிஜிபி ரமேஷ் தாஸ் என்பவர் மீது பெண் ஐபிஎஸ் அதிகாரி புகார் அளித்திருந்தார்.பெண் ஐபிஎஸ் அதிகாரி பாலியல் புகார் தொடர்பாக அளித்த புகாரை விசாரிக்க கூடுதல் தலைமை செயலாளர் ஜெயஸ்ரீ ரகுநந்தன் தலைமையில் 6 பேர் கொண்ட குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் இது குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் … Read more

ராயபுரம் தொகுதியில் போட்டியிட அமைச்சர் ஜெயக்குமார் விருப்ப மனு

ராயபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளார் அமைச்சர் ஜெயக்குமார்.   தமிழகத்தில் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.அதிமுகவில் விருப்பமனு விநியோகம் இன்று முதல் தொடங்கியது.தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளா சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர், இன்று முதல் மார்ச் 5-ஆம் தேதி வரை விருப்பமனு பெற்று பூர்த்தி செய்யலாம் என்றும், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் விருப்பமனுக்களை பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்ப … Read more

சூடு பிடிக்கும் தமிழக அரசியல் ! சசிகலாவை நேரில் சந்தித்த சீமான்

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை தியாகராயர் நகரில் உள்ள சசிகலாவை அவரது இல்லத்தில் சந்தித்துள்ளார்.  மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்த தினம் இன்று சென்னை தியாகராயர் நகரில் உள்ள இல்லத்திலேயே இருந்து ஜெயலலிதா படத்திற்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினார் சசிகலா.சிறையில் இருந்து விடுதலையாகி வெளியே வந்த பிறகு இன்று தான் சசிகலா ஜெயலலிதா பிறந்த நாள் நிகழ்வில் பங்கேற்றுள்ளார். இதனிடையே இன்று சென்னை தியாகராயர் நகரில் உள்ள சசிகலா இல்லத்தில் சமத்துவ மக்கள் … Read more

பாலியல் தொல்லை கொடுத்த DGP ! இந்நிலை தொடர்ந்தால் திமுக போராட்டத்தில் இறங்கும் – மு.க.ஸ்டாலின்

பெண் IPS அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தமிழக காவல்துறை சிறப்பு DGP ராஜேஸ்தாஸை முதல்வர் பழனிசாமி காப்பாற்றி வருவதற்கு கடும் கண்டனம் தெரிவிப்பதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாருக்கு உள்ளாகியிருக்கும் தமிழகக் காவல்துறை சிறப்பு டி.ஜி.பி. திரு. ராஜேஸ்தாஸை, முதலமைச்சர் திரு. பழனிசாமி காப்பாற்றி வருவதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாலியல் குற்றத்திற்கு உள்ளாகும் ஒரு சில … Read more

புதுச்சேரியில் குடியரசுத்தலைவர் ஆட்சி ! மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதுச்சேரியில் குடியரசுத்தலைவர் ஆட்சியை அமல்படுத்த மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு கவிந்த நிலையில், அங்கு குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்த மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு பஆளுநர் தமிழிசை பரிந்துரை செய்திருந்தார். எந்த கட்சியும் ஆட்சியமைக்க உரிமை கோராத நிலையில், புதுச்சேரியில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என மத்திய உள்துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டது. இதையடுத்து, புதுச்சேரியில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவது குறித்து பிரதமர் மோடி தலைமையில் … Read more

#INDvENG: டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது இங்கிலாந்து

3 ஆம் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது இங்கிலாந்து.   இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4 டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரில் முதல் இரண்டு போட்டிகள் சென்னையில் நடைபெற்று முடிந்தது. டெஸ்ட் தொடரில் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சம நிலையில் உள்ளது.இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாம் டெஸ்ட் போட்டி, இன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் பகல் – இரவு ஆட்டமாக நடைபெறவுள்ளது.இந்நிலையில்  இந்த போட்டியில் டாஸ் … Read more

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்துக்கு பிரதமர் மோடி பெயர்

அகமதாபாத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய மொட்டேரா கிரிக்கெட் மைதானத்திற்கு பிரதமர் மோடி பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4 டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரில் முதல் இரண்டு போட்டிகள் சென்னையில் நடைபெற்று முடிந்தது. டெஸ்ட் தொடரில் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சம நிலையில் உள்ளது. இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாம் டெஸ்ட் போட்டி, இன்று குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள சர்தார் பட்டேல் மைதானத்தில் பகல் – இரவு ஆட்டமாக … Read more