மளிகை, பெட்ரோல் பங்க் நேரம் குறைப்பு

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் வரும் ஜூன் 19 தேதி  முதல் 12 நாட்கள் முழு ஊரடங்கு  என்று அறிவித்துள்ளது தமிழக அரசு.அதன்படி அந்த பகுதிகளில்,  காய்கறி கடைகள், மளிகைக் கடைகள் மற்றும் பெட்ரோல் பங்குகள் உரிய விதிமுறைகளுக்கு உட்பட்டு சமூக இடைவெளியுடன் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நடமாடும் காய்கறி, பழ விற்பனை கடைகள் காலை 6 மணி முதல் … Read more

#BREAKING : 4 மாவட்ட அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 நிவாரணம் – முதலமைச்சர் அறிவிப்பு

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில்  உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 நிவாரணம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார் முதலமைச்சர் பழனிசாமி.  இது குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில், பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும், திருவள்ளூர் மாவட்டத்தில், பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள், திருவள்ளூர் நகராட்சி, கும்மிடிபூண்டி, பொன்னேரி மற்றும் மீஞ்சூர் பேரூராட்சிகளிலும் மற்றும் பூவிருந்தவல்லி, ஈக்காடு மற்றும் சோழவரம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும்,செங்கல்பட்டு மாவட்டத்தில், பெருநகர சென்னை காவல் … Read more

#BREAKING : 4 மாவட்டங்களில் மீண்டும் முழு பொது முடக்கம் – தமிழக அரசு அறிவிப்பு

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் வரும் ஜூன் 19 தேதி  முதல் 12 நாட்கள் முழு ஊரடங்கு  என்று அறிவித்துள்ளது தமிழக அரசு . கொரோனோ தொற்று அதிகரித்து வரும் நிலையில் அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பின் முதலமைச்சர்  பழனிசாமி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் வரும் ஜூன் 19 தேதி  முதல் 12 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது .அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் … Read more

உலகம் முழுவதும் வெடிக்கும் போராட்டம் ! இங்கிலாந்தில் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையால் 100 பேர் கைது

இங்கிலாந்தில் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையால் 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் ஜார்ஜ் ப்லாய்ட் எனும் கறுப்பினத்தவரை போலீசார் கழுத்தில் முட்டியை வைத்து நெரித்து கொலை செய்ததை கண்டித்து, அமெரிக்கா முழுவதும் போராட்டம் வெடித்தது. அமெரிக்கா மட்டுமல்லாது உலகளவிலும் போராட்டங்கள் வெடித்த வண்ணமே உள்ளது.  இதன் ஒருபகுதியாக இங்கிலாந்திலும் இதனை கண்டித்து போராட்டம் நடைபெற்று வருகிறது.இங்கிலாந்து தலைநகர் லண்டனில் ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.குறிப்பாக வலதுசாரி அமைப்புகள் போராட்டம் நடத்தியது.இந்த போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது.அப்பொழுது போராட்டக்காரர்கள் … Read more

டெல்லியில் ஊரடங்கு நீட்டிப்பா ? முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு

டெல்லியில் மீண்டும் ஊரடங்கு இல்லை என முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.  நாட்டின் தலைநகரான டெல்லியில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.தற்போதைய நிலவரப்படி அங்கு 41,182 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.மேலும் மருத்துவக்குழு ஜூலை மாதத்துக்குள் டெல்லியில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொரோனாவால் பாதிக்கப்படுவார்கள் என்று எச்சரிக்கை விடுத்தது . இதனால் நேற்று  டெல்லி துணைநிலை ஆளுநர், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ஹர்ஷ்வர்தன் ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டனர்.இதனையடுத்து உள்துறை … Read more

இந்தியா – நோபாளம் இடையிலான உறவை எந்த சக்தியாலும் முறிக்க முடியாது- ராஜ்நாத் சிங் திட்டவட்டம்

இந்தியா – நோபாளம் இடையிலான உறவை எந்த சக்தியாலும் முறிக்க முடியாது என்று  ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.  இந்தியாவின் அண்டை நாடாக இருந்து வருகிறது நேபாளம்.இந்த நாடு இந்தியாவுடன்  1800 கி.மீ எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளது. ஏற்கனவே ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் போடப்பட்ட ஒப்பந்தத்தின் கணக்குபடி லிபுலேக் கணவாயை தங்களது பகுதி என்று அண்மை காலமாக கருத்து கூறிவருகிறது. மேலும், லிம்பியாதுரா, காலாபானி பகுதிகளையும் தங்களது பகுதி என நேபாளம் உரிமை கோரிவருகிறது.இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள லிபுலேக் கணவாய், … Read more

கொரோனா பாதிப்பை குறைக்க கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும் – மருத்துவக்குழு

கொரோனா பாதிப்பை குறைக்க கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும் என்று  மருத்துவக்குழு பரிந்துரை செய்துள்ளது.  தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில்,தலைமை செயலகத்தி மருத்துவ குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி மீண்டும் நாளை ஆலோசனை நடத்தினார்.இதன் பின்னர் மருத்துவ குழுவின் குகானந்தம் கூறுகையில்,தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தற்போது உச்சத்தை எட்டியுள்ளது. உச்சத்தை எட்டியுள்ளதால் கொரோனா பாதிப்பு இனி குறையத் தொடங்கும்.சென்னையில் கட்டுப்பாடுகளை கடுமையாக்க மருத்துவ நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளதாக தெரிவித்தார்.தமிழகம் முழுவதும் 75,000 படுக்கை … Read more

நவம்பரில் கொரோனா உச்சமா ? ஐசிஎம்ஆர் விளக்கம்

நவம்பரில் கொரோனா உச்சமா ? என்பது குறித்து ஐசிஎம்ஆர் விளக்கம் அளித்துள்ளது.  இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,20,922லிருந்து 3,32,424ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,62,379லிருந்து 1,69,798ஆக உயர்ந்துள்ளது .கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9,195ருந்து 9,520ஆக உயர்ந்துள்ளது.நாட்டிலே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,07,958 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.அங்கு  குணமடைந்தோர் எண்ணிக்கை 50,978ஆகவும்,உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,950ஆக உயர்ந்துள்ளது. இதனிடையே  நவம்பர் மாத மத்தியில் தான் இந்தியாவில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருக்குமென இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் … Read more

டெல்லியில் அமித்ஷா தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம்

டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்று வருகிறது .கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் ,டெல்லியில் அதிகரித்துவரும் கொரோனா பாதிப்பு குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பாகிஸ்தானில் இந்திய தூதரக அதிகாரிகள் மாயம் – ஏஎன்ஐ தகவல்

பாகிஸ்தானில்  இந்திய தூதரக அதிகாரிகள் 2 பேரை காணவில்லை என ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.இந்திய தூதரகத்தில் பணியாற்றிய அதிகாரிகள் 2 பேரை கண்டுபிடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது .இந்திய தூதரக அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் அண்மையில் சிலர் நடந்து கொண்டனர்.இதனிடையே சில வாரங்களுக்கு முன் இந்தியாவில் உளவு பார்த்ததாக பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் நாடு கடத்தப்பட்டனர்.