#BREAKING : 4 மாவட்ட அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 நிவாரணம் – முதலமைச்சர் அறிவிப்பு

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில்  உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 நிவாரணம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார் முதலமைச்சர் பழனிசாமி. 

இது குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில், பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும், திருவள்ளூர் மாவட்டத்தில், பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள், திருவள்ளூர் நகராட்சி, கும்மிடிபூண்டி, பொன்னேரி மற்றும் மீஞ்சூர் பேரூராட்சிகளிலும் மற்றும் பூவிருந்தவல்லி, ஈக்காடு மற்றும் சோழவரம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும்,செங்கல்பட்டு மாவட்டத்தில், பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள், செங்கல்பட்டு மற்றும் மறைமலைநகர் நகராட்சிகளிலும், நந்திவரம்- கூடுவாஞ்சேரி பேரூராட்சியிலும் மற்றும் காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும்,காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில்  உள்ளர்வர்களுக்கு மட்டும் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 நிவாரணம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை பெருநகர காவல் எல்லைகுட்பட்ட பகுதிகளில் வரும் 19ம் தேதி முதல் 30 தேதி வரை ரேஷன் கடைகள்   காலை 8 மணி முதல் மதியம் 2 மணிவரை செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் ரேஷன் கடைகள் இயங்காது. நிவாரணப் பொருட்கள் வீடு தேடி வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.