அதிகரிக்கும் கொரோனா ! மருத்துவ குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி மீண்டும் ஆலோசனை

மருத்துவ வல்லுநர்களுடன் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது குறித்து முதல்வர்  பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். தமிழகத்தில், நேற்று ஒரே நாளில் புதிதாக 1974  பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதுவரை 44,661 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.இதுவரை 24,547 பேர் குணமடைந்துள்ளனர்.19,676 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 435 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில்,தலைமை செயலகத்தி மருத்துவ குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி … Read more

தலைமை செயலக பத்திரிக்கையாளர் அறை மூடல்

கொரானா தடுப்பு நடவடிக்கையாக தலைமைச் செயலகத்தில் இருக்கும் பத்திரிகையாளர்கள் அறை மூடபட்டுள்ளது.   தலைமை செயலகத்தில் பணியில் இருந்த பத்திரிகையாளர்களுக்கு கொரனா தொற்று உறுதியானதால் தடுப்பு நடவடிக்கையாக பத்திரிகையாளர் அறை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.பத்திரிக்கையாளர் அறை கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்தப்பட்ட பின் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசிக்க அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு

டெல்லியில் கொரோனாவை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசிக்க அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  நாட்டின் தலைநகரான டெல்லியில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.தற்போதைய நிலவரப்படி அங்கு 41,182 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.மேலும் மருத்துவக்குழு ஜூலை மாதத்துக்குள் டெல்லியில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொரோனாவால் பாதிக்கப்படுவார்கள் என்று எச்சரிக்கை விடுத்தது . இதனால் நேற்று  டெல்லி துணைநிலை ஆளுநர், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ஹர்ஷ்வர்தன் ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டனர்.இதனையடுத்து உள்துறை … Read more

கொரோனா குறித்து இரண்டு நாட்கள் பிரதமர் மோடி ஆலோசனை

கொரோனா குறித்து  இரண்டு நாட்கள் மாநிலங்களுடன்  பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.  கொரோனா பரவல் தொடங்கியதும் அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது.ஒரு சில தளர்வுகளும் அளிக்கப்பட்டுள்ளது.ஆனாலும் தொடர்ந்து கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.இதற்குஇடையில் தான் பிரதமர் நரேந்திர மோடி மாநில முதலமைச்சர்களுடன் ஆலோனை மேற்கொண்டு கொரோனா நிலவரங்கள் குறித்து அறிந்து வருகிறார். இதுவரை 5 முறை ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் தான் மீண்டும் முதலமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொள்கிறார் பிரதமர் மோடி.இரண்டு … Read more

முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம்

முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் இன்று  தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. தமிழகத்தில், நேற்று  ஒரே நாளில் புதிதாக 1974  பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 44,661 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன்விளைவாக  முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் இன்று  நண்பகல் 12 மணிக்கு தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது.

#BREAKING : தமிழகத்தில் 44 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு

தமிழ்நாட்டில் இதுவரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 44,661ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில், இன்று ஒரே நாளில் புதிதாக 1974  பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதுவரை 44,661 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.இதுவரை 24,547 பேர் குணமடைந்துள்ளனர்.19,676 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 435 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் இன்று ஒரே நாளில் 1415 பேர் பாதிக்கப்பட்டனர்.தற்போது, வரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 31,896 ஆக அதிகரித்துள்ளது.    

#BREAKING: சென்னையில் கொரோனா பாதிப்பு 31 ஆயிரத்தை தாண்டியது

சென்னையில்  கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,415 -ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் ஒரே நாளில் 1415 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 31,896 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில்  14,667 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில்,16,881பேர் தொற்றிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பினார். மேலும் சென்னையில் 347 பேர் உயிரிழந்துள்ளனர். 

கொரோனாவால் உயிரிழந்தவர்கள் விகிதம் மறைக்கப்படுகிறதா ? அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்

கொரோனாவால் உயிரிழந்தவர்கள் விகிதத்தை மறைக்கும் அவசியம் அரசுக்கு இல்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்  தெரிவித்துள்ளார்.  தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.குறிப்பாக கொரோனா பாதிப்பில் இந்திய அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. தமிழகத்தில் தினமும் கொரோனா குறித்த தகவல்கள் அளிக்கப்பட்டு வருகிறது.இதனிடையே கொரோனாவால் உயிரிழந்தவர்களின் விகிதம் மறைக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், கொரோனாவால் உயிரிழந்தவர்கள் விகிதத்தை மறைக்கும் அவசியம் அரசுக்கு இல்லை. வெளிப்படைத்தன்மையோடு அரசு செயல்பட்டு … Read more

கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க  500 ரயில் பெட்டிகள் – அமித் ஷா

டெல்லியில் கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க  500 ரயில் பெட்டிகள் வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். நாட்டின் தலைநகரான டெல்லியில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.எனவே டெல்லி துணைநிலை ஆளுநர், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ஹர்ஷ்வர்தன் ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டனர்.  இந்நிலையில்  டெல்லியில் கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதுமான படுக்கைகள் இல்லாததால் 500 ரயில் பெட்டிகள் வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.தனியார் மருத்துவமனைகளில் … Read more

சுஷாந்த் சிங் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது – பிரதமர் நரேந்திரமோடி

தோனியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் தோனியின் கதாபாத்திரத்தை ஏற்று நடித்த நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.இவரது மறைவு பாலிவுட் திரை உலகத்திற்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்துள்ளது.பலரும் இவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இவரின் மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்த்தில் பதிவிட்டுள்ள பிரதமர்,  பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது .இளம் நடிகர் மிக விரைவில் சென்றுவிட்டார். பொழுதுபோக்கு உலகில் … Read more