காட்டிற்குள் சுற்றுலா சென்ற குடும்பம்.. கதவை திறந்து லிப்ட் கேட்ட சிங்கம்!!

தென்னாபிரிக்கா காட்டிற்குள் காரில் சுற்றுலா சென்ற குடும்பத்திற்கு அங்குள்ள பெண் சிங்கம் ஒன்று காரின் கதவை திறந்து அவர்களுக்கு அதிர்ச்சி குடுத்தது. தற்பொழுது அந்த வீடியோ வைரலாகி வருகிறது. இது தொடர்பாக ஐஎப்எஸ் (IFS) அதிகாரி சுசந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு விடியோவை வெளியிட்டார். அந்த வீடியோவில் அந்த குடும்பத்தினர் காரிலிருந்து சிங்கங்களை ஆர்வமுடன் பார்த்து கொண்டிருந்தனர். அப்பொழுது அங்கிருந்த ஒரு பெண் சிங்கம், அந்த குடும்பத்தினரின் சஃபாரி வாகனத்திற்கு அருகில் நடந்து வந்தது. … Read more

தமிழகத்தில் நாளை முதல் 17 தொழிற்பேட்டைகள் இந்த கட்டுப்பாடுகளுடன் இயங்கும்- தமிழக அரசு!

தமிழகத்தில் நாளை முதல் சில கட்டுப்பாடுகளுடன் 17 தொழிற்பேட்டைகள் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருவதால், 4ஆம் கட்ட ஊரடங்கை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், சென்னையில் நாளை முதல் கிண்டி, அம்பத்தூர் உட்பட 17 தொழிற்பேட்டைகள் இயங்க சில கட்டுப்பாடுகளுடன் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதில், அனைத்து தொழிற்பேட்டைகளிலும் 25 சதவீத அளவிலான பணியாளர்களை இயங்குமாறும், பணிக்கு வரும் தொழிலார்கள் அனைவரின் உடல்வெப்பநிலையை … Read more

சேலத்தில் பிரபல குக்கர் தயாரிப்பு ஆலையில் தீ விபத்து.!

சேலத்தில் உள்ள ஒரு பிரபல குக்கர் ஆலையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. 5 வாகனங்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர்.  சேலம் மாவட்டம், கூட்ரோடு பகுதியில் இபிரபல குக்கர் தயாரிப்பு ஆலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த ஆலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீயை, 5 தீயணைப்பு வாகனம் மூலம் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர். மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 

வேலூரில் இன்று முதல் 2 நாட்களுக்கு ஜவுளி கடைகள் திறக்க அனுமதி..!

வேலூர் மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, இரண்டு நாட்களுக்கு அம்மாவட்டத்தில் அனைத்து ஜவுளிக்கடைகளை திறக்கப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். ரம்ஜான் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், வேலூர் மாவட்டத்தில் இன்றும், நாளையும் அனைத்து ஜவுளி கடைகள் திறக்க அம்மாவட்ட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். மேலும், கடைகளில் ஏசி பயன்படுத்தக்கூடாது எனவும், சமூக இடைவெளியை பின்பற்றுமாறு அவர் அறிவுறுத்தினார்.

பாகிஸ்தான் விமான விபத்தின் கடைசி திக் திக் நிமிடங்கள்.. விமானியின் கடைசி ஆடியோ வெளியானது !

பாகிஸ்தானில் நேற்று நடந்த விமான விபத்தில் 99 பேர் உயிரிழந்த நிலையில், அந்த விபத்து தொடர்பான விமானி பேசிய கடைசி திக் திக் ஆடியோ ஒன்று வெளியானது. பாகிஸ்தான், லாகூரிலிருந்து கராச்சியை நோக்கி பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான PK-8303 விமானம் புறப்பட்டது. அந்த விமானம், கராச்சி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. சிறிது நேரத்தில் தரையிறங்க வேண்டிய அந்த விமானம், திடீரென விமான நிலையத்திற்கு அருகிலிருந்த குடியிருப்பு பகுதிக்குள் விழுந்தது. இதுவரை … Read more

#Breaking: சென்னையில் 10000ஐ நெருங்கிய கொரோனா பாதிப்பு..!

சென்னையில் ஒரே நாளில் 624 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 9,989 ஆக உயர்வு. தமிழகத்தில் இன்று புதிதாய் 759 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 15,512 ஆக உயர்ந்துள்ளது. இன்று 5 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 103 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கொரோனா தொற்றிலிருந்து மீண்டு, வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 7,491 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், சென்னையில் இன்று ஒரே நாளில் 624 … Read more

கொத்துக் கொத்தாக பறிமுதல் செய்யப்பட்ட போதை சாக்லேட்.!

திருப்பூரில் தடை செய்யப்பட்ட போதை சாக்லேட் விற்கப்பட்டு வந்த நிலையில், அங்கு விரைந்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், அதனை பறிமுதல் செய்து, 3 பேரை கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள சின்னக்கரையில் தடை செய்யப்பட்ட போதை சாக்லேட்  விற்கப்பட்டு வருவதாக உணவு பாதுகாப்பு துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.  இந்நிலையில் அங்கு விரைந்த உணவு பாதுகாப்பு துறை, அங்கு சோதனை நடத்தினார்கள். அப்பொழுது, அங்கு தடை செய்யப்பட்ட போதை சாக்லேட், குவியல் … Read more

ஒரே நாளில் 21 பி.எஸ்.எஃப் வீரர்களுக்கு கொரோனா!

கடந்த 24 மணிநேரத்தில் 24 பி.எஸ்.எஃப் வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதால், மொத்தமாக 120 பி.எஸ்.எஃப் வீரர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அந்த வைரஸால் மொத்தமாக 125,149 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் மேலும், அந்த வைரசால் 3,728 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. சிறியவர், பெரியவர், என ஆல்பாராமால் தாங்கும் இந்த கொரோனா வைரஸ், பி.எஸ்.எஃப் வீரர்களையும் விடவில்லை. கடந்த 24 மணிநேரத்தில் … Read more

ஆர்.எஸ்.பாரதியிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசாரின் விசாரணை நிறைவு!

ஆர்.எஸ்.பாரதியிடம் மத்திய குற்றப்பிரிவு  போலீசார் நடத்தி வந்த விசாரணை நிறைவு பெற்றுள்ள நிலையில், அவரை எழும்பூர் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். நீதிபதிகள், பட்டியலின மக்களை அவமதிக்கும் வகையில் பேசியதாக திமுக அமைப்பு செயலாளர் மீது ஆதித்தமிழர் மக்கள் கட்சி தலைவர் கல்யாண் குமார் என்பவர் காவல் துறையினரிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில், ஆர்.எஸ்.பாரதியை இன்று காலையில் சென்னையில் உள்ள அவரின் வீட்டில் கைது செய்யப்பட்டார். மேலும் அவர் மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் … Read more

அடுத்து தயாநிதிமாறன் in Waiting list? – ஹெச் ராஜா ட்வீட்!

நீதிபதிகள், பட்டியலின மக்களை அவமதிக்கும் வகையில் பேசியதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டார். இதுகுறித்து ஆதித்தமிழர் மக்கள் கட்சி தலைவர் கல்யாண் குமார் என்பவர் காவல் துறையினரிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில், ஆர்.எஸ்.பாரதியை இன்று காலையில் சென்னையில் உள்ள அவரின் வீட்டில் கைது செய்யப்பட்டார். மேலும் அவர் மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். … Read more