வேலூரில் இன்று முதல் 2 நாட்களுக்கு ஜவுளி கடைகள் திறக்க அனுமதி..!

வேலூர் மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, இரண்டு நாட்களுக்கு அம்மாவட்டத்தில் அனைத்து ஜவுளிக்கடைகளை திறக்கப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். ரம்ஜான் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், வேலூர் மாவட்டத்தில் இன்றும், நாளையும் அனைத்து ஜவுளி கடைகள் திறக்க அம்மாவட்ட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். மேலும், கடைகளில் ஏசி பயன்படுத்தக்கூடாது எனவும், சமூக இடைவெளியை பின்பற்றுமாறு அவர் அறிவுறுத்தினார்.

மேகாலயாவில் நாளை முதல் கடைகள் திறக்க அனுமதி.!

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில், மேகாலயா மாநிலத்தில் கொரோனா வைரஸால் மொத்தமே 13 பேர் மட்டும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து, அம்மாநிலத்தில் வரும் திங்கள்கிழமை முதல் கடைகளை மீண்டும் திறக்கவும், வாகனங்களை இயக்கவும் அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், ஷில்லாங்கில் 2 பேர் கொரோனா தாக்கத்தால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால், இந்தத்தளர்வு அங்கு பொருந்தாது என தெரிவித்துள்ளது.

மால்கள், வணிக வளாகங்கள் தவிர்த்து அனைத்து தனிக் கடைகளும் இந்த நேரத்தில் இயங்கலாம்.!

மால்கள் மற்றும் வணிக வளாகங்கள் தவிர்த்து, அனைத்து தனிக் கடைகளும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் செயல்பட அனுமதி வழங்கப்படுகிறது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், நாளையுடன் முடிவடைய இருந்த ஊரடங்கை மே 17 ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டு, அதற்கான கட்டுப்பாட்டு நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டது. இதையடுத்து இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. … Read more