நடிகை மீரா மிதுனுக்கு ஜாமீன்…ஆனாலும்,வெளியில் வர முடியாது?…!

அவதூறு கருத்துக்களை பரப்பியதாக எம்.கே.பி நகர் போலீசார் பதிவு செய்திருந்த கொலை மிரட்டல் வழக்கில் நடிகை மீரா மிதுனுக்கு எழும்பூர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. பட்டியலின மக்களை அவதூறாக பேசிய வழக்கில் கேரளாவில் பதுங்கி இருந்த நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் அபிஷேக் ஆகியோரை கடந்த ஆக.14 ஆம் தேதி சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து,மீரா மிதுனுக்கு இரண்டு வாரம் நீதிமன்ற காவல் தண்டனை விதிக்கப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். … Read more

ஆர்.எஸ்.பாரதியிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசாரின் விசாரணை நிறைவு!

ஆர்.எஸ்.பாரதியிடம் மத்திய குற்றப்பிரிவு  போலீசார் நடத்தி வந்த விசாரணை நிறைவு பெற்றுள்ள நிலையில், அவரை எழும்பூர் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். நீதிபதிகள், பட்டியலின மக்களை அவமதிக்கும் வகையில் பேசியதாக திமுக அமைப்பு செயலாளர் மீது ஆதித்தமிழர் மக்கள் கட்சி தலைவர் கல்யாண் குமார் என்பவர் காவல் துறையினரிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில், ஆர்.எஸ்.பாரதியை இன்று காலையில் சென்னையில் உள்ள அவரின் வீட்டில் கைது செய்யப்பட்டார். மேலும் அவர் மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் … Read more

விஷால் மீது ஜாமினில் வர முடியாத அளவிற்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது எழும்பூர் நீதிமன்றம்!

விஷாலின் தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தில் பணிபுரிந்த வாடிக்கையாளர்களுக்கு சம்பள பணத்தில் குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்பட்டு சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. அது தொடர்பாக வந்த புகாரின் அடிப்படையில், வருமான வரித்துறையினர், எழும்பூர் நீதிமன்றத்தில், வழக்கு தொடரப்பட்டது.  அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், விஷால் நீதிமன்றம் வராததால், அவர் மீது, ஜாமினில் வெளியே வராதபடி, பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.