#CSKvSRH: ஹாட்-டிரிக் தோல்வியில் இருந்து தப்புமா தல தோனியின் சென்னை அணி?

ஐபிஎல் தொடரின் 29 ஆம் போட்டியான இன்று, சென்னை சூப்பர் கிங்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஹைதராபாத் அணிகள் மோதவுள்ளது. ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறவுள்ள 29 ஆம் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதவுள்ளது. இந்த போட்டி, சென்னை அணியில் தாய் மைதானமான துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த இரு அணிகளும் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் 7 போட்டிகளில் விளையாடியது. அதில் ஹைதராபாத் … Read more

கொரோனா பரவலை தடுக்க 3 அடுக்கு எச்சரிக்கை முறை.. புதிதாக வெளியிட்ட பிரிட்டன் பிரதமர்!

கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவர பிரிட்டன் பிரதமர், 3 அடுக்கு எச்சரிக்கை முறையை இங்கிலாந்து முழுவதும் அமல்படுத்தியுள்ளார். உலகளவில் கொரோனா பரவல் அதிகரித்து கொண்டே வருகிறது. பொதுமக்கள் முதல் அதிபர் வரை யாரென பாராமல் கொரோனா பரவும் நிலையில், அதனை கட்டுக்குள் கொண்டுவர உலக நாடுகள் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில், பிரிட்டனில் கொரோனா பரவல் தற்பொழுது அதிகரிக்க தொடங்கியது. குறிப்பாக நேற்று ஒரே நாளில் 13,000 பேருக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கனவே … Read more

இந்தியாவில் வெளியானது ஹோண்டா ஹைனெஸ் சிபி 350.. விலை என்ன தெரியுமா?

ஹோண்டா நிறுவனம், தனது புதிய ஹோண்டா ஹைனெஸ் சிபி 350 பைக்குகளை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இது, ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350, ஜாவா, ஜாவா 42, பெனெல்லி இம்பீரியல் 400 போன்றவற்றுக்கு பயங்கர போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அம்சங்கள்: டிஎல்எக்ஸ் மற்றும் டிஎல்எக்ஸ் ப்ரோ என இரண்டு வேரியண்ட்களில் வெளியான இந்த பைக், ரெட்ரோ-ஸ்டைல் டிசைன், வட்ட வடிவ ஹெட்லேம்ப், அகலமான ஹேண்டில்பார், டியர்-டிராப் வடிவ பெட்ரோல் டேன்க், ஒற்றை இருக்கை மற்றும் சாப்டு பென்டர்களை … Read more

கடும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று வெளியாகவுள்ளது ஐபோன்-12!

உலகளவில் கடும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 12 சீரியஸ் இன்று வெளியாகவுள்ளது. உலகம் முழுவதும் ஐபோன்-12 போன் பற்றிய எதிர்பார்ப்புகள் அதிகளவில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் ஆப்பிள் தனது புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவது வழக்கம். அதேபோல இந்தாண்டில் தனது ஐபோன்-12 சீரியஸை வெளியிடும் என அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் அந்த தினம் ஐபேட் மற்றும் சில சாதனைகளை அறிமுகம் செய்தது. இது, ஐபோன் ரசிகர்களிடையே கடும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. … Read more

அதிர்ச்சி.. கோயம்பேடு சந்தையில் பணியாற்றும் 50 பேருக்கு கொரோனா!

சென்னையில் உள்ள கோயம்பேடு சந்தையில் பணியாற்றும் வியாபாரிகள், தொழிலாளர்கள் என 50 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவர சென்னையில் உள்ள கோயம்பேடு சந்தை மூடப்பட்டது. இந்தநிலையில், தமிழகத்தில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், கோயம்பேடு காய்கறி மொத்த விற்பனை அங்காடிகள் திறக்கப்பட்டது. இதில் பொதுமக்கள் மற்றும் சிறு வியாபாரிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதன்படி அங்கு 200 பெரிய மொத்த வியாபார கடைகள் மட்டும் திறக்கப்பட்டன. சந்தைக்கு காய்கறி வாங்க வரும் வியாபாரிகள் … Read more

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 62 பேர் உயிரிழப்பு!

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 62 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் குறைய தொடங்கிய நிலையில், அதுகுறித்த அறிவிப்பை தினமும் மாலை சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிடும். அந்தவகையில், இன்று ஒரே நாளில் 4,879 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 6,61,264 ஆக அதிகரித்துள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் ஒரே நாளில் 1,212 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை … Read more

காங்கிரஸ் மூத்த தலைவர், சிபிஎம் மாநிலச் செயலரிடம் நலம் விசாரித்த மு.க.ஸ்டாலின்!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் கே.வி.தங்கபாலு மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனிடம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு, சென்னையில் உள்ள ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தநிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கே.வி.தங்கபாலுவிடம் தொலைபேசி வாயிலாக நலம் விசாரித்ததாக … Read more

தரையில் அமர வைத்த விவகாரம்.. கைதான ஊராட்சி செயலாளர் மருத்துவமனையில் அனுமதி!

ஊராட்சி தலைவர் ராஜேஸ்வரி அவமதிக்கப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஊராட்சி செயலர் சிந்துஜா, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள தெற்குதிட்டை பெண் ஊராட்சி மன்றத் தலைவராக பணியாற்றி வருபவர் பட்டியலினத்தை சேர்ந்த ராஜேஸ்வரி. அண்மையில் நடைபெற்ற ஊராட்சி மன்ற கூட்டத்தில், ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஸ்வரி தரையில் அமர வைக்கப்பட்டார். மேலும், ராஜேஸ்வரி பட்டியலினத்தை சேர்ந்தவர் என்பதால் அவமதிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதை தொடர்ந்து, தெற்குதிட்டை ஊராட்சி மன்ற செயலாளர் சிந்துஜா சஸ்பெண்ட் செய்யப்பட்டு, … Read more

சர்வர் பிரச்சனை.. தமிழகம் முழுவதும் ரேஷன் பொருட்களை விநியோகிப்பதில் தாமதம்!

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் உள்ள பயோமெட்ரிக் இயந்திரத்தின் சர்வர் பிரச்சனை காரணமாக பொருட்களை விநியோகிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 33,794 ரேஷன் கடைகள் உள்ளது. இந்த ரேஷன் கடைகளுக்கு பயோ மெட்ரிக் முறையில் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் இயந்திரத்தின் சர்வர் பிரச்சனை காரணமாக பொருட்களை விநியோகிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. நேற்று காலை 9 முதல் 10 மணி வரை இயங்கியதாகவும், அதன்பின் சர்வர் பிரச்சனை காரணமாக பயோமெட்ரிக் … Read more

“அதிமுகவில் அமைச்சரும் தொண்டரும் சமம்!” – அமைச்சர் செல்லூர் ராஜூ

அதிமுகவில் அமைச்சரும் தொண்டரும் சமம் என தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார். மதுரையில் நடைபெற்ற அதிமுக உறுப்பினர் சேர்க்கையில் தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்துகொண்டார். அங்கு கலந்துகொண்டு பேசிய அவர், அதிமுகவில் அமைச்சரும் தொண்டரும் சமம் எனக் கூறினார். மேலும் பேசிய அவர், பொருளாதாரத்தை மீட்டெடுப்பதில் தமிழகம் சிறந்து விளங்குவதாக தெரிவித்தார். திமுகவில் அமைச்சரும் தொண்டரும் சமம் எனக் கூறிய அவர், கட்சியை வலுவுடன் நடத்த முதல்வர், துணை … Read more