சர்வர் பிரச்சனை.. தமிழகம் முழுவதும் ரேஷன் பொருட்களை விநியோகிப்பதில் தாமதம்!

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் உள்ள பயோமெட்ரிக் இயந்திரத்தின் சர்வர் பிரச்சனை காரணமாக பொருட்களை விநியோகிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் 33,794 ரேஷன் கடைகள் உள்ளது. இந்த ரேஷன் கடைகளுக்கு பயோ மெட்ரிக் முறையில் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் இயந்திரத்தின் சர்வர் பிரச்சனை காரணமாக பொருட்களை விநியோகிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

நேற்று காலை 9 முதல் 10 மணி வரை இயங்கியதாகவும், அதன்பின் சர்வர் பிரச்சனை காரணமாக பயோமெட்ரிக் இயந்திரம் இயங்காத ரேஷன் பொருட்கள் விநியோகிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் பொருட்கள் வாங்க வந்த மக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவநிலை ஏற்பட்டது.

இந்தநிலையில், பயோ மெட்ரிக் இயந்திரத்தை மாற்றிவிட்டு, அதற்கு பதில் கண்விழி பதிவு இயந்திரம் வழங்க வேண்டும் என தமிழக ரேஷன் கடை பணியாளர்கள் சங்க மாநில செயலாளர் ஜெயசந்திர ராஜா கோரிக்கை விடுத்தார்.