11-ஆம் வகுப்புக்கு மறுகூட்டல் தேதியை அறிவித்த தேர்வுத்துறை

11-ஆம் வகுப்பு மாணவர்கள் விடைத்தாள் நகல், மதிப்பெண் சான்றிதழ் , மறுகூட்டலுக்கு ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். கடந்த மார்ச் மாதம் +2 மற்றும் +1 பொதுத்தேர்வு நடைபெற்று இதில் இதையடுத்து, கடந்த 16-ஆம் தேதி +2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. அதன் தொடர்ச்சியாக எழுதிய +1 பொதுத்தேர்வு முடிவுகள் மற்றும்  பன்னிரண்டாம் வகுப்பு மறுவாய்ப்பு தேர்வு எழுதிய மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. விடைத்தாள் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிப்பதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் … Read more

இன்று பிரதமர் மோடி உரை.. எதிர்பார்ப்பில் மக்கள் !

கொரோனா வைரஸ் காரணமாக  நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, மத்திய அரசு இரண்டு நாள்களுக்கு முன் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை 3-வது கட்டமாக அறிவித்தது. ஆனால், தமிழகம் உள்பட சில மாநிலங்களில் கொரோனா அதிகரிப்பு காரணமாக ஆகஸ்டு 30-ஆம் தேதி வரை  ஊரடங்கு நீட்டித்துள்ளன. இந்நிலையில், இன்று மாலை 4.30 மணிக்கு நாட்டு மக்களிடையே உரையாற்றுகிறார். கொரோனா ஊரடங்கு அமல்படுத்தினாலும்,  நீட்டித்தாலும், தளர்வுகள் அளித்தாலும் அது குறித்து பிரதமர் மோடி  மக்களிடையே உரையாற்றி வருகிறார். இதற்கிடையில், … Read more

#BREAKING: சிறப்பு ரயில் சேவை தடை ஆகஸ்ட் 15 வரை நீட்டிப்பு – தெற்கு ரயில்வே.!

கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக  ரயில் சேவை முற்றிலும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. பின்னர், ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டதையடுத்து, தமிழகத்தில் சில சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. இந்த ரயில்களும் கடந்த ஜூன் மாதம் 29-ம் தேதி முதல் ஜூலை 31-ஆம் தேதி அதாவது இன்று வரை ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று மீண்டும்  ரயில்கள் நிறுத்தப்பட்டதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. Special trains in Tamil Nadu … Read more

ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் விதித்த தடைக்கு எதிராக.. கொறடா உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு..!

ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் விதித்த தடைக்கு எதிராக காங்கிரஸ் கொறடா சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட்டிற்கு எதிராக துணை முதலமைச்சராக இருந்த சச்சின் பைலட் போர்க்கொடி தூக்கி, தனது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் டெல்லியில் முகாமிட்டுள்ளார். மேலும், கட்சிக் கொறடா உத்தரவை மீறிய சச்சின் பைலட் உள்பட அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர் மீது தகுதி நீக்க நோட்டீஸை ராஜஸ்தான் சபாநாயகர் அனுப்பினார். இதை எதிர்த்து, சச்சின் பைலட் ஆதரவு எம்.எல்.ஏக்கள் ராஜஸ்தான் உயர் … Read more

#BREAKING: தமிழகத்தில் ஒரே நாளில் 5,881 பேருக்கு கொரோனா பாதிப்பு.!

இன்று தமிழகத்தில் புதிதாக 5,881 பேருக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில், நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகின்றது. இதையடுத்து, இன்று 5,881 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை, மொத்தமாக 2,45,859 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்று 5,778  பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை கொரோனாவில் இருந்து 1,83,956 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் இன்று ஒரே நாளில் 1,013 பேர் பாதிக்கப்பட்டனர். … Read more

ஊழியர்கள் மூலமாக ட்விட்டரில் நுழைந்த ஹேக்கர்கள்..!

சமூக வலைதளங்களில் அவ்வபோது ஹேக்கர்கள் ஹேக் செய்வது நடைபெற்று வருகிறது. கடந்த சில நாள்களுக்கு முன் அமெரிக்க பிரபலங்களின் டிவிட்டரில் நுழைந்த  ஹேக்கர்கள்  மோசடியில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஹேக்கர்களால் குறிவைக்கப்பட்ட 130 கணக்குகளில் 45 கணக்குகள்  எலோன் மஸ்க், அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, தற்போதைய அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் மற்றும் பில் கேட்ஸ் ஆகியோரின் கணக்குகளில் இருந்து குறிப்பிட்ட பிட்காயின் அட்ரஸுக்கு உடனடியாகப் பணம் அனுப்பினால் அது இரட்டிப்பாகி உங்களுக்கு திரும்பிவரும் எனப் … Read more

பிரதமர் மோடிக்கு தனிப்பட்ட செயலாளராக ஹார்டிக் சதீஷ்சந்திர ஷா நியமனம் .!

பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட செயலாளராக ஹார்டிக் சதீசந்திர ஷா நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று பணியாளர் அமைச்சின் உத்தரவுப்படி பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட செயலாளராக ஐ.ஏ.எஸ் அதிகாரி ஹார்டிக் சதீசந்திர ஷா நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இதற்கு முன்பு பிரதமர் அலுவலகத்தின் துணை செயலாளராக இருந்தார். ஹார்டிக் சதீஷ்சந்திர ஷா ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி, கடந்த  2017 ஆம் சுற்றுச்சூழல் அமைச்சர் அனில் மாதவ் டேவின் தனிப்பட்ட செயலாளராக இருந்தார். பின்னர், கடந்த ஆண்டு பிரதமர் அலுவலகத்திற்கு வருவதற்கு … Read more

#BREAKING: சீமானுக்கு எதிரான அவதூறு வழக்கு- ரத்து செய்ய மறுப்பு தெரிவித்த நீதிமன்றம்

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக முதல்வர் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.எனவே சீமான் தரப்பில்,அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள பேச்சு சுதந்திரத்தின் அடிப்படையில்தான் பேசியதாகவும், அதனால், இந்த வழக்கை ரத்து செய்யவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.அரசு தரப்பில் வாதிடுகையில், முதல் அமைச்சர் குறித்து சீமான் கடுமையாக வார்த்தைகள் கொண்டு அவதூறாக  கூறியுள்ளார் என்று தெரிவித்தார்.இதனையடுத்து சீமானின் மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

#BREAKING: BS-4 ரக வாகனங்களை பதிவு செய்ய தடை! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு .!

கடந்த  ஏப்ரல் 1-ம் தேதிக்குப் பின்னர் பிஎஸ்-4  வாகனங்களை உற்பத்தி செய்யவோ விற்கவோ கூடாது என தடை விதிக்கப்பட்டது.  இதையடுத்து, வாகன விற்பனையாளர்கள் கூட்டமைப்பின் கோரிக்கையை ஏற்று 10 நாட்களுக்கு கட்டுப்பாடுகளுடன் வாகனங்களை விற்பனை செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது. ஒரு லட்சம் வாகனங்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என அனுமதி வழங்கிய நிலையில், 2.55 லட்சம் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. இந்நிலையில், இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது உச்சநீதிமன்றம் வழங்கிய அனுமதியை … Read more

சிறுமி வன்கொடுமை வழக்கு.. திமுக முன்னாள் எம்எல்ஏ விடுதலை.!

சிறுமி வன்கொடுமை வழக்கில் பெரம்பலூர் திமுக முன்னாள் எம்எல்ஏ ராஜ்குமார் விடுதலை செய்யப்பட்டார். கடந்த 2012-ஆம் ஆண்டு திமுக முன்னாள் எம்எல்ஏ ராஜ்குமார் வீட்டில் வேலை செய்த வந்த கேரளாவை சேர்ந்த சிறுமியை வன்கொடுமை செய்து மரணத்தை ஏற்படுத்தியதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கடந்த 2018-ஆம் ஆண்டு ராஜ்குமார் மற்றும்  ஜெய்சங்கருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ராஜ்குமார் சென்னை … Read more