தொடங்கியது வடகிழக்கு பருவமழை… சென்னை வானிலை மையம் அறிவிப்பு…

தமிழகத்திற்க்கு அதிக  மழைப்பொழிவை அளிப்பதில்  வடகிழக்கு பருவமழை தான் அதிக முக்கிய இடம் வகிக்கிறது. ஆண்டுதோறும், இந்த பருவமழை காலத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 44 செ.மீ. மழை அளவு பதிவாகும். இந்த பருவமழை ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 3-வது வாரமோ அல்லது மாத இறுதியிலோ தொடங்குவது வழக்கம். அதன்படி, தற்போது வடகிழக்கு பருவமழை தற்போது தொடங்கி இருக்கிறது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் எஸ்.பாலச்சந்திரன் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது, தென்மேற்கு … Read more

அரசு பள்ளி மாணவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு… அறிவித்தார் புதுவை முதல்வர்…

அரசுப் பள்ளியில் படிக்கின்ற மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுவது குறித்து புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி நேற்று அறிவித்துள்ளார். புதுவையில், நடைபெற்ற நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் 94 பேர் தேர்ச்சிபெற்றுள்ளனர். அதே நேரத்தில் தனியார் பள்ளிகளில் படித்த 1,346 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு அரசு பள்ளிகளில் படித்த 16 பேர் மட்டுமே மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர். ஆனால் தனியார் பள்ளிகளில் படித்த 243 பேருக்கு இடம் கிடைத்துள்ளது. … Read more

டெல்லி சிறைகளில் போதிய இடமில்லாததால் மேலும் 30 நாட்களுக்கு கைதிகளுக்கு ஜாமின்…

இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டு உள்ள விசாரணை கைதிகள்  3,337 பேருக்கு மேலும் 30 நாள் நீட்டிப்பு. இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள சூழலில் கடந்த பல மாதங்களாக மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.  வீட்டை விட்டு அச்சமின்றி வெளியே வர முடியாத நிலை காணப்படுகிறது.  இந்த நிலையில், டெல்லியில் உள்ள சிறைச்சாலைகளில் கைதிகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து உள்ளது. இது ஒருபுறம் இருக்க  தலைநகர் டெல்லியில்  குற்றங்கள் அதிகரித்திருக்கும் நிலையில் தற்போது  சிறைகளில் போதிய … Read more

இந்தியா-அமெரிக்கா இடையே ராணுவ தொழில்நுட்ப பரிமாற்ற ஒப்பந்தம்

எல்லையில் நம் அண்டை நாடான சீனா தொல்லை கொடுத்து வரும் பதற்றமான சூழ்நிலையில், தற்பொது  இந்தியா-அமெரிக்கா இடையே ராணுவ தொழில்நுட்ப பரிமாற்ற ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதன்படி, அடிப்படை பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தம்  என்ற இந்த ஒப்பந்தம், இருதரப்பு உறவை கணிசமாக விரிவுபடுத்துவதற்கு முக்கியமாக அடையாளம் காணப்பட்ட 4 ஒப்பந்தங்களின் நிறைவாக தற்போது கையெழுத்தாகி உள்ளது. அதன் விவரங்களான:- இதற்கு முன், 2002ல் இந்தியா – அமெரிக்கா இடையே ராணுவ தகவல்களை பாதுகாப்புடன் பகிர்ந்து கொள்வதற்கான … Read more

துர்கா பூஜை கொண்டாட்டம்… படகுகள் கவிழ்து விபத்து… 5பேர் பலி..

மேற்கு வங்கம் மாநிலத்தில் நடந்த துர்கா பூஜை கொண்டாட்டங்களின் போது  பூஜைக்கு வைக்கப்பட்ட துர்கா சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்படுகின்றன.அப்போது எதிர்பாரதவிதமாக படகு கவிழ்ந்து விபத்து நிகழ்ந்துள்ளது. முர்ஷிதாபாத் மாவட்டத்துக்கு உட்பட்ட பெல்டங்காவில் துர்கா சிலை ஒன்றை ஆற்றில் கரைப்பதற்காக படகில் கொண்டு சென்றனர். அங்கு 2 படகுகளில் அந்த சிலையை வைத்து ஆற்றின் நடுப்பகுதிக்கு கொண்டு சென்றனர். அப்போது திடீரென அந்த படகுகள் கவிழ்ந்தன. இதில் படகில் இருந்த 6 பேரும் நீருக்குள் சிலைக்கு அடியிலும்  சிக்கிக்கொண்டனர். … Read more

3 மாத சம்பள பாக்கி…டாக்டர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்…

3 மாத சம்பள பாக்கியை தர வலியுறுத்து அவசர சிகிச்சை பிரிவில் பணியாற்றும் மருத்துவர்கள் கூட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மறுத்து போராட்டம். டெல்லி வடக்கு மாநகராட்சிக்கு உட்பட்ட அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு கடந்த 3 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. இந்த சம்பள நிலுவையை உடனடியாக வழங்கக்கோரி மூத்த டாக்டர்கள் நேற்று முன்தினம் கூண்டோடு சாதாரண விடுப்பில் சென்றனர். இதைத்தொடர்ந்து மாநகராட்சி மருத்துவமனைககளில் பணிபுரியும் 700-க்கும் மேற்பட்ட மூத்த டாக்டர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை … Read more

பாகிஸ்தானில் சாலை விபத்து… சம்பவ இடத்தில் 8 பேர் பலி…

பாகிஸ்தானில் நிகழ்ந்த கொடூர வாக விபத்தில் 8 பேர் மரணம். நம் அண்டை நாடான பாகிஸ்தான் நாட்டில் ஜீலம் மாவட்டத்தில் உள்ள காரிப்வால் என்னும் கிராமத்தில் சரக்கு லாரி ஒன்று வேன் மீது மோதி விபத்திற்குள்ளானது. இந்த கொடூர விபத்தில் 8 பேர் மரணமடைந்தனர்,  பலர் படுகாயமடைந்தனர். விபத்தில் சிக்கியவர்கள் அருகே உள்ள சிமெண்ட் தொழிற்சாலையில் பணிபுரிய தொழிலாளர்களை ஏற்றி கொண்டு சென்ற  வேன் விபத்தில் சிக்கியது. இது குறித்த  தகவல் அறிந்து மீட்பு பணி அதிகாரிகள் உடனடியாக … Read more

தாடி வளர்த்த காவலர்… வீட்டுக்கு அனுப்பிய அதிகாரி… மழித்து விட்டு மீண்டும் பணியில் அந்த காவலர்…

உயரதிகாரியின் முன் அனுமதியின்றி தாடிவளர்த்த காவலர் பணியிடை நீக்கம். உத்தர பிரதேச மாநிலத்தின் பாக்பத் மாவட்டத்தில் ரமலா காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் இந்திஜார் அலி.  இவர் உயரதிகாரியின் முன் அனுமதியின்றி தாடி வளர்த்துள்ளார். எனவே,அவரை தாடியை மழிக்கும்படி காவல் கண்காணிப்பாளர் கூறியுள்ளார்.  ஆனால் 3 முறை கூறியும் உயரதிகாரியின் உத்தரவை அவர் ஏற்கவில்லை என கூறப்படுகிறது.  இதனால் ஒழுங்கீன நடவடிக்கையாக கடந்த 20ந்தேதி இந்திஜார் அலி பணியிடை நீக்கம்  செய்யப்பட்டார்.  கடந்த சில … Read more

சூரிய ஒளி உற்பத்தியில் இந்தியா உலக சாதனை… மோடி பெருமிதம்…

சூரிய ஒளி மின்சார தயாரிப்பில் இந்தியா உலகளாவிய சாதனையை படைத்து வருகிறது என்று பிரதமர் மோடி பெருமையுடன் கூறினார். குஜராத் மாநிலத்தில் வேளாண்மை, மருத்துவம்,  சுற்றுலா ஆகிய துறைகளுக்கான வளர்ச்சித்  திட்டங்களை பிரதமர் மோடி நேற்று காணொலி காட்சி மூலம் தொடங்கி  வைத்தார். அப்போது பேசிய அவர், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க, அவர்களின் உற்பத்தி செலவு, சிரமங்களை குறைக்க, காலத்திற்கேற்ப அரசு  அதிகளவிலான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.நாட்டில் சூரிய மின்சக்தி திட்டத்தை விவரமான கொள்கைகளுடன், பத்து ஆண்டுகளுக்கு … Read more

லடாக் விவகாரத்தில் அமெரிக்காவின் முழு ஆதரவு இந்தியாவுக்கே… வெள்ளை மாளிகை அறிவிப்பு…

இந்தியாவின் லடாக் எல்லையில்  சீனா அளித்து வரும் பிரச்னையில் இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வருகிறது. இந்நிலையில், நேற்று வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், இந்தியா-  சீனா  இடையே நீடித்து வரும் பதற்றத்தில் அமெரிக்காவின் நிலைபாடு என்ன என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த வெள்ளை மாளிகை அதிகாரி,  இந்தியா-அமெரிக்கா இடையேயான பேச்சுவார்த்தை அடுத்த வாரத்தில் டெல்லியில் நடைபெற உள்ளது. இந்தப் பேச்சுவார்த்தையில்  இந்தியாவுக்கான முழுமையான ஆதரவை டிரம்ப் நிர்வாகம் வழங்கும். எல்லை பிரச்னை மட்டுமின்றி இந்தியாவுடன் … Read more