இந்தியா-அமெரிக்கா இடையே ராணுவ தொழில்நுட்ப பரிமாற்ற ஒப்பந்தம்

எல்லையில் நம் அண்டை நாடான சீனா தொல்லை கொடுத்து வரும் பதற்றமான சூழ்நிலையில், தற்பொது  இந்தியா-அமெரிக்கா இடையே ராணுவ தொழில்நுட்ப பரிமாற்ற ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

இதன்படி, அடிப்படை பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தம்  என்ற இந்த ஒப்பந்தம், இருதரப்பு உறவை கணிசமாக விரிவுபடுத்துவதற்கு முக்கியமாக அடையாளம் காணப்பட்ட 4 ஒப்பந்தங்களின் நிறைவாக தற்போது கையெழுத்தாகி உள்ளது.

அதன் விவரங்களான:-

  • இதற்கு முன், 2002ல் இந்தியா – அமெரிக்கா இடையே ராணுவ தகவல்களை பாதுகாப்புடன் பகிர்ந்து கொள்வதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.
  • 2016ல் முக்கிய ராணுவ கூட்டாளியாக இந்தியாவை அங்கீகரித்த அமெரிக்கா இரு
    தரப்பு ராணுவ வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பங்களை பகிர்ந்து கொள்ள ஒப்பந்தம் செய்தது.
  •  2018ல் தங்களின் ராணுவ தளங்களை இரு நாடுகளும் பயன்படுத்திக் கொள்ளவும் ஒப்பந்தம் செய்துகொண்டன. இறுதியாக தற்போது பிஇசிஏ ஒப்பந்தம் தற்போது கையெழுத்தாகி உள்ளது.
author avatar
Kaliraj