அரசு பள்ளி மாணவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு… அறிவித்தார் புதுவை முதல்வர்…

அரசுப் பள்ளியில் படிக்கின்ற மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுவது குறித்து புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி நேற்று அறிவித்துள்ளார். புதுவையில், நடைபெற்ற நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் 94 பேர் தேர்ச்சிபெற்றுள்ளனர். அதே நேரத்தில் தனியார் பள்ளிகளில் படித்த 1,346 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு அரசு பள்ளிகளில் படித்த 16 பேர் மட்டுமே மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர். ஆனால் தனியார் பள்ளிகளில் படித்த 243 பேருக்கு இடம் கிடைத்துள்ளது. … Read more

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 16-ம் தேதி புதுச்சேரியில் மனித சங்கிலி போராட்டம் நடைபெறும்- முதலமைச்சர் நாராயணசாமி

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,  புதுச்சேரியில் பட்ஜெட்டை தாக்கல் செய்ய துணைநிலை ஆளுநர் கிரண்பேடி முட்டுக்கட்டை போடுகிறார். மேலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை புதுச்சேரியில் செயல்படுத்த விடமாட்டோம் என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார் .ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 16-ம் தேதி புதுச்சேரியில் மனித சங்கிலி போராட்டம் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.