டெல்லி சிறைகளில் போதிய இடமில்லாததால் மேலும் 30 நாட்களுக்கு கைதிகளுக்கு ஜாமின்…

டெல்லி சிறைகளில் போதிய இடமில்லாததால் மேலும் 30 நாட்களுக்கு கைதிகளுக்கு ஜாமின்…

இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டு உள்ள விசாரணை கைதிகள்  3,337 பேருக்கு மேலும் 30 நாள் நீட்டிப்பு.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள சூழலில் கடந்த பல மாதங்களாக மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.  வீட்டை விட்டு அச்சமின்றி வெளியே வர முடியாத நிலை காணப்படுகிறது.  இந்த நிலையில், டெல்லியில் உள்ள சிறைச்சாலைகளில் கைதிகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து உள்ளது. இது ஒருபுறம் இருக்க  தலைநகர் டெல்லியில்  குற்றங்கள் அதிகரித்திருக்கும் நிலையில் தற்போது  சிறைகளில் போதிய இடமில்லாத சூழலும் காணப்படுகிறது.

இதனை எதிர்கொள்ள டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரது தலைமையில் குழு ஒன்று ஆலோசனை மேற்கொள்ள அமைக்கப்பட்டது. எனவே இந்த குழுவின் அறிக்கையின் படி டெல்லி சிறைகளில் உள்ள விசாரணை கைதிகளில் 3,337 பேருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டு உள்ளது. மேலும், அவர்களுக்கு 30 நாள் நீட்டிப்பு வழங்குவது என நீதிபதி குழு முடிவு செய்துள்ளது.  இதனால், கொரோனா பாதிப்பு காலத்தில் போதிய இடமின்றி சிறைகள் நிரம்பி வழியும் சூழலில் கைதிகள் மற்றும் காவலர்களுக்கு சற்று நிவாரணம் கிடைக்க வழிவகை ஏற்படும்.

author avatar
Kaliraj
Join our channel google news Youtube