நடிகர் ரஜினிகாந்த் இம்மாத இறுதியில்அமெரிக்கா பயணமா?

நடிகர் ரஜினிகாந்த், ரிஷிகேஷ், தர்மசாலா உள்ளிட்ட புனிதத் தலங்களுக்கு சென்றுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் தமது ஆன்மீகப் பயணத்தை நிறைவு செய்து உடல் நலப் பரிசோதனைக்காக அமெரிக்கா செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தர்மசாலாவில் பாபாஜி தியான மையத்தில் இமாச்சலப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் பிரேம் குமார் தூமலுடன் காட்சியளித்த ரஜினி அடுத்த சில நாட்களில் தமது ஆன்மீகப் பயணத்தை நிறைவு செய்ய உள்ளார். விரைவில் ரஜினி சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இம்மாத இறுதியில் அவர் அமெரிக்கா செல்வதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Actor Rajinikanth at the end of this month

author avatar
Dinasuvadu desk

Leave a Comment