பிறக்கும் குழந்தையின் தலையில் ரூ.62,000 கடன் சுமை – முக ஸ்டாலின்

பிறக்கும் குழந்தையின் தலையில் கூட 62 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் கடன் சுமை என திமுக தலைவர் முக ஸ்டாலின் குற்றசாட்டியுள்ளார்.

சென்னை வாலாஜாசாலை, கலைவாணர் அரங்கில் கூடும் சட்டப்பேரவையில் தமிழக அரசின் 2021-22 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இந்நிலையில், இதுகுறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் கூறுகையில், தமிழக வரலாற்றில் கடன் வாங்கி கடனுக்கு வட்டி கட்டும் ஒரே அரசு அதிமுக அரசுதான்.

தமிழக அரசின் கடன் சுமை ரூ.5.70 லட்சம் கோடி என அறிவித்த, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், பிறக்கும் குழந்தையின் தலையில் கூட ரூ.62 ஆயிரம் கடன்சுமை ஏற்பட்டுள்ளதாக மு.க.ஸ்டாலின் குற்றசாட்டியுள்ளார். 10.9% தொழில் வளர்ச்சி 4.6% ஆக சரிந்துள்ளதாகவும், 5 மடங்கு கடன் வாங்கி அதிமுக ஆட்சி நடத்தி உள்ளதாகவும் ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்