மத்திய அரசு காவிரி மேலாண்மை விவகாரத்தில் வேண்டும் என்றே காலம் தாழ்த்துவதை ஏற்க முடியாது…!

மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்  காவிரி மேலாண்மை விவகாரத்தில் மத்திய அரசு வேண்டும் என்றே காலம் தாழ்த்துவதை ஏற்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.

சென்னை பட்டாளத்தில் ஜெயலலிதா பிறந்த நாளை ஒட்டி நடைபெற்ற விழாவில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஜெயக்குமார், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ஆட்சியில் இருந்த போது காவிரி விவகாரத்தில் திமுக மவுனமாக இருந்து விட்டு, இப்போது நாடகமாடுவதாக குற்றம் சாட்டினார்.

தமிழ்நாட்டின் உரிமைக்காக நடத்தப்படும் எந்தப் போராட்டத்தையும் கொச்சைப் படுத்தக் கூடாது என்று தெரிவித்த  ஜெயக்குமார், மெரீனாவில் போராட்டம், பொதுக்கூட்டங்கள் நடத்த உயர்நீதிமன்றமே தடைவிதித்திருப்பதைச் சுட்டிக்காட்டினார். அனுமதிக்கப்பட்ட இடங்களில் போராட்டம் நடத்தினால் அதற்கு அரசே பாதுகாப்புத் தரும் என்றும் தெரிவித்தார். காவிரி விவகாரத்தில் மத்திய தமிழகத்திற்கு அநீதி இழைத்திருப்பதாகவும் அதற்கு நீதி காண்பதற்காகவே அவதூறு வழக்கு தொடரப்பட்டிருப்பதாகவும் ஜெயக்குமார் தெரிவித்தார்.

ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் குறித்த கேள்விக்கு பதிலளித்த ஜெயக்குமார், மக்களின் நலனுக்கு ஊறுவிளைவிக்கும் எந்த ஒரு செயலையும் தடுக்க அரசு தயாராக இருக்கிறது எனத் தெரிவித்தார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment