6_வது நாளாக பெட்ரோல் , டீசல் விலை குறைந்துள்ளது….!!

சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று 6வது நாளாக குறைந்துள்ளது.
பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினசரி நிர்ணயம் செய்து கொள்ள மத்திய அரசு அளித்த அனுமதியை அடுத்து ஒவ்வொரு நாளும் விலை அதிகரித்து வந்தது. கடந்த 2 மாதங்களுக்கு மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே சென்றது.
இந்த நிலையில் கடந்த 18ந்தேதி பெட்ரோல் லிட்டருக்கு 22 காசு குறைந்து, ஒரு லிட்டர் 85 ரூபாய் 88 காசுக்கு விற்பனை ஆனது. அதற்கு அடுத்த நாளும் அதே விலையில் தான் விற்பனை செய்யப்பட்டது. அதன்பின் 20ந்தேதி மீண்டும் விலை குறைந்தது. பெட்ரோல் லிட்டருக்கு 66 காசு குறைந்து, 85 ரூபாய் 22 காசுக்கு விற்பனை ஆனது.
பெட்ரோல் விலையை போலவே, டீசல் விலையும் கடந்த 18ந்தேதி குறைந்தது. 20ந்தேதியும் விலை குறைந்தே காணப்பட்டது. லிட்டருக்கு 24 காசு குறைந்து, ஒரு லிட்டர் டீசல் 79 ரூபாய் 69 காசுக்கு விற்பனை செய்யப்பட்டது.
அதன்பின் நேற்று முன்தினம் 4வது நாளாக பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு 26 காசு குறைந்து ரூ.84.96க்கு விற்பனையானது.  இதேபோன்று டீசல் விலை 18 காசு குறைந்து ரூ.79.51க்கு விற்பனை செய்யப்பட்டது.சென்னையில் நேற்று பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு 32 காசு குறைந்து ரூ.84.64க்கு விற்பனையானது.  இதேபோன்று டீசல் விலை 29 காசு குறைந்து ரூ.79.22க்கு விற்கப்பட்டது.
இந்த நிலையில், சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு 11 காசு குறைந்து ரூ.84.53க்கு விற்பனையாகிறது.  இதேபோன்று டீசல் விலை 7 காசு குறைந்து ரூ.79.15க்கு விற்பனை செய்யப்படுகிறது.கடந்த 6 நாட்களில் பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.1.57 மற்றும் டீசல் விலை 89 காசு குறைந்து விற்பனையாகிறது.தொடர்ந்து விலை அதிகரித்து வந்த நிலையில் கடந்த 6 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை இறங்குமுகத்தில் இருக்கிறது.
DINASUVADU
author avatar
Dinasuvadu desk

Leave a Comment