12%இல் இருந்து 5% ஆக வெட் கிரைண்டர் மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும்!அமைச்சர் ஜெயக்குமார் 

அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில்  டெல்லியில் 28 ஆவது ஜிஎஸ்டி கூட்டம்  தொடங்கியது. ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தமிழகம் சார்பில் அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்றார்.

இதில் பேசிய அவர், 12%இல் இருந்து 5% ஆக வெட் கிரைண்டர் மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும். விவசாயம், கூட்டுறவு வங்கி, கல்வி நிறுவன சேவைகளுக்கு வரிகுறைப்பு பற்றி முடிவு எடுக்க வேண்டும்  என்று டெல்லியில் 28ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

 

Leave a Comment