ஸ்டெர்லைட்டின் வேதாந்தா தமிழகத்தை மீண்டும் தோண்டி எடுக்கவுள்ளது…!!

சென்னை: ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு அனுமதி பெற்றுள்ளது வேதாந்தா நிறுவனம்.

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் தோண்டி எடுக்கும் திட்டத்திற்கு அனுமதி பெற்றுள்ளது வேதாந்தா. ஸ்டெர்லைட்டை நடத்தும் வேதாந்தா நிறுவனம் தற்போது ஹைட்ரோ கார்பனும் தமிழகத்தில் எடுக்க உள்ளது. இது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இதற்கான ஒப்பந்தம் நேற்று கையெழுத்தாகி உள்ளது. ஆனால் இதுகுறித்த அறிவிப்பை முறையாக மத்திய அரசோ, வேதாந்தா நிறுவனமோ வெளியிடவில்லை.

ஜெம் கைவிட்டதுமுதலில் தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஜெம் நிறுவனம் ஒப்பந்தம் ஆகி இருந்தது. ஆனால் மக்கள் தொடர்ச்சியாக இதற்கு எதிராக போராடி வந்தனர். இதனால் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை டெல்டா பகுதியில் எடுக்க கைவிட்டது ஜெம் நிறுவனம்.இந்நிலையில் வேதாந்தா கைப்பற்றியது.எனவே வேதாந்தா நிறுவனம் டெல்டா பகுதிகளில் 2 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க உள்ளது. ஆனால் எந்த இடங்கள் என்ற விவரம் இன்னும் வெளியாகவில்லை

வேதாந்தா நிறுவனம் மத்திய அரசிடம் இதற்காக 3934 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்ததுள்ளது. இந்தியா முழுக்க 41 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க உள்ளது. அதில் தமிழகத்தில் இரண்ம் இடங்கள் தேர்வாகி உள்ளது. ஸ்டெர்லைட்டை நடத்தும் வேதாந்தா நிறுவனம், ஹைட்ரோ கார்பனும் எடுக்க உள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த திட்டத்திற்கு எதிராக போராடிய மக்கள் பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர். ஸ்டெர்லைட் ஆலை காரணமாக தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடத்திய காயங்கள் ஆறும் முன் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது…

DINASUVADU

author avatar
Dinasuvadu desk

Leave a Comment