ரம்ஜானை முன்னிட்டு ஜம்மு காஷ்மீரில் ஒருமாத சண்டை நிறுத்தம் இன்றுடன் முடிவடைகிறது!

ஜம்மு காஷ்மீரில் ரம்ஜானை முன்னிட்டு மத்திய அரசு அறிவித்த ஒருமாத சண்டை நிறுத்தம் இன்று முடிவுக்கு வருகிறது. இதனால் இம்மாதம் முழுவதும் தீவிரவாதிகள் மற்றும் பாகிஸ்தானின் தாக்குதலுக்கு ஆளாகி கடும் உயிர்ச்சேதத்தை சந்தித்த இந்திய ராணுவத்தின் கைகள் கட்டவிழ்க்கப்படுகின்றன.

ரம்ஜானை தாண்டியும் சண்டை நிறுத்தத்தை நீட்டிக்க வேண்டும் என்று காஷ்மீர் அரசியல் கட்சிகள் கோரியுள்ளன. எனினும் இந்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்காது என்றே கூறப்படுகிறது.

நேற்று பாஜக பொதுச் செயலாளர் ராம் மாதவர் ஸ்ரீநகரில் பல்வேறு அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தினார். முதலமைச்சர் மெஹ்பூபா முப்தி உள்ளிட்டோரும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். அமர்நாத் யாத்திரை தொடங்க இருப்பதாலும் தீவிரவாதிகளின் கைகள் ஓங்கி இருப்பதாலும் ரம்ஜானைக் கடந்து சண்டை நிறுத்தம் நீட்டிக்கப்பட வாய்ப்பில்லை என்று பாஜகவினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment