மதநல்லிணக்கத்தின் அடையாளம் திப்புசுல்தான்…!

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மைசூர் மன்னர் திப்பு சுல்தான் மதநல்லிணக்கத்தின் அடையாளமாகத் திகழ்ந்தவர் எனக்  தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலம் சிக்மகளூர் மாவட்டத்தில் உள்ள சிருங்கேரி சாரதாம்பா பீடத்துக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி சென்று வழிபாடு நடத்தினார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மைசூர் மன்னர் திப்பு சுல்தான் மத நல்லிணக்கத்தின் அடையாளமாகத் திகழ்ந்ததாகத் தெரிவித்தார்.

போர்க்காலத்தில் மிக நெருக்கடியில் சிக்கித் தவித்த வேளையிலும் பல கோவில்களுக்கு நிலங்களைக் கொடையாகத் திப்பு எழுதிவைத்ததையும் அவர் குறிப்பிட்டார். சிருங்கேரி மடத்துக்கும் திப்பு கொடைகள் அளித்துள்ளதாகவும் ராகுல் காந்தி தெரிவித்தார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment