நாகையில் காவேரி மேலாண்மை அமைத்திட வலியுறுத்தி 3000-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் எஸ்எப்ஐ சார்பில் போராட்டம் …!

நாகையில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரி,மயிலாடுதுறை மணல்மேடு அரசு கல்லூரியில் காவேரி மேலாண்மை வாரியத்தை அமைத்திட வலியுறுத்தியும், ஹைட்ரோகார்பன்,மீத்தேன்,ஷேல் கேஸ் திட்டத்தை உடனே வாபஸ் பெறக்கோரியும் வகுப்பு புறக்கணித்து போராட்டம் நடைபெற்றது.

நாகை மாவட்டம் நாகை நகரத்தில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரி,மயிலாடுதுறை மணல்மேடு அரசு கல்லூரியில் காவேரி மேலாண்மை வாரியத்தை அமைத்திட வலியுறுத்தியும், ஹைட்ரோகார்பன்,மீத்தேன்,ஷேல் கேஸ் திட்டத்தை உடனே வாபஸ் பெறக்கோரியும் வகுப்பு புறக்கணித்து சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

நாகையில் இந்திய மாணவர் சங்க மாநிலத்தலைவர் வி.மாரியப்பன் தலைமையிலும், மணல்மேடு கல்லூரியில்  இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் ப.மாரியப்பன் தலைமையில் 3000 மேற்ப்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.

போராட்டத்தில்  இந்திய மாணவர் சங்க மாவட்டத்தலைவர் மு.ஜோதிபாசு, இந்திய மாணவர் சங்க மாவட்ட துணை தலைவர் அ.ஶ்ரீதரன், இந்திய மாணவர் சங்க மாவட்ட செயற்குழு உறுப்பினர் கு.முகேஷ்,மாட்டக்குழு உறுப்பினர் செ.கபிலன், த.கவியரசன், இந்திய மாணவர் சங்க மயிலை செயலாளர் சீ.முத்துப்பாண்டி, கல்லூரி தலைவர் க.அன்புசெல்வன், கல்லூரி செயலாளர் சந்திப்ராஜ்,ரஞ்சிதா உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment