நடிகர் எஸ்.வி.சேகரை பாதுகாப்பது மத்திய அரசா? அல்லது இங்குள்ள அவரது உறவினர்களா?கனிமொழி

இன்று காலை விமானம் மூலம் மதுரை வந்தார் தி.மு.க. மாநில மகளிர் அணி செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி. விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தொடர்ந்து  காவிரி விவகாரத்தில் அநீதி இழைக்கப்பட்டு வருகிறது. பா.ஜனதா சொல்வதை கேட்டு தலையாட்டும் அரசாக அ.தி.மு.க. உள்ளது.

பா.ஜனதாவினருக்கு முக்கிய பதவிகள் வழங்கப்படுவது இதனை வெளிப்படையாக காட்டுகிறது.நடிகர் எஸ்.வி.சேகர் விவகாரத்தில் அவரை கைது செய்யாதது ஏன்? அவரை பாதுகாப்பது மத்திய அரசா? அல்லது இங்குள்ள அவரது உறவினர்களா? என்று தெரியவில்லை. இதை நீங்கள் தான் கேள்வி கேட்க வேண்டும்.

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment