திருச்சியில் விவசாய கண்காட்சி!200 வகை வாழை பழ ரகங்கள் காட்சி!

பல்வேறு வாழைப் பழ ரகங்களை திருச்சியில் நடைபெற்று வரும் விவசாய கண்காட்சியில் இடபெற்ற  ஏராளமானோர் கண்டுகளித்தனர்.

தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த கண்காட்சியில், தாயனூர் தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தின் சார்பில் 200 வகை வாழை பழ ரகங்கள் காட்சிபடுத்தப்பட்டு இருந்தன.

இதில் இதுவரை அதிகளவு பொதுமக்கள் பயன்படுத்தாத சிங்கன், தொழுவன், பூ வாசம் வீசும் மனோரஞ்சிதம், மால்போக் உள்ளிட்ட பல்வேறு வகை வாழைப் பழங்கள் காட்சி படுத்தப்பட்டு இருந்ததோடு, அதன் சிறப்பு குறித்தும் பொதுமக்களுக்கு விளக்கப்பட்டது.

குறிப்பாக பப்பாளி பழம் போன்று இருந்த பொக்போலு எனும் வாழை ரகம் காண்போரை கவர்ந்தது. இந்த கண்காட்சியை விவசாயிகள், பள்ளி, கல்லூரி மாணவிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கண்டுகளித்தனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment