சென்னையில் தீக்குளிக்க முயன்ற 2 காவலர்களும் கூறுவது அப்பட்டமான பொய்!

தேனி மாவட்ட எஸ்.பி. பாஸ்கரன் சென்னை டிஜிபி அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற ஆயுதப்படை காவலாகள் இருவரும் பொய்யான புகார்களை தெரிவித்துள்ளனர் என்றும் அவர்கள் மீது துறை ரீதியிலான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்ட ஆயுதப்படையில் பணியாற்றி வரும் ரகு மற்றும் கணேஷ் என்ற 2 காவலர்கள், சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுக்க வந்தனர். மனுவை கொடுத்த பின்பு வெளியே வந்த அவ்கள் இருவரும் தீக்குளிக்க முயன்றனா. ஆனால் அவாகளை சக காவலாகள் தடுத்து நிறுத்தினா.

இது குறித்து நடந்த விசாரணையில், இருவரும் தேனி மாவட்ட ஆயுதப்படையில் பணிபுரிந்த போது, அவர்கள் மீது சாதி அடிப்டையில் மேலதிகாரிகள் நடந்து கொண்டதாகவும், பழி வாங்கும் நோக்கத்துடன் ராமநாதபுரம் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டதாகவும் குற்றம் சாட்டினர்.

இந்த சம்பவம் போலீசார் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உடனடியாக இது தொடர்பாக காட்சிகள் தமிழகம் முழுவதும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. தேனி மாவட்ட எஸ்.பி. பாஸ்கரன் இது குறித்து விளக்கம் அளித்தார்.   சிறைக் கைதிகளிடம் கஞ்சா சிக்கியது தொடாபாக சிறைகண்காளிப்பாளா அளித்த புகாரின் அடிப்படையில் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலா ரகு மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது என கூறினார்.

காவலா கணேஷ் தனக்கு ஒதுக்கப்பட்ட பணிக்கு முறையாக செல்லாமல் சீருடையுடன் ரேக்ளா பந்தயத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் சில பிரச்சனைகள் தொடர்பாக காவல்துறையினருக்கு எதிராக அவாகள் சுவரொட்டிகள் ஒட்டியுள்ளனா என்றும் அவர் குடிறிப்பிட்டார்.இதுபோன்று பல ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டதன் காரணமாகவும், துறை உத்தரவை மதிக்காமல் இருந்த காரணத்தாலும், குறிப்பிட்ட இருவா மீதும் நடவடிக்கை எடுக்க ஆயுதப்படை துணை கண்காணிப்பாளா பரிந்துரை செய்ததாகவும், அதன் அடிப்படையிலேயே அவர்கள் இருவரும் ராமநாதபுரத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனா என்றும் விளக்கம் அளித்தார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment