சாயக்கழிவு நீர் திருமணிமுத்தாற்றில் கலப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்!சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி

நாமக்கல், கரூர் வழியாக சென்று ஏற்காடு மலையில் உற்பத்தியாகும் திருமணிமுத்தாறு காவிரியில் கலக்கிறது. தற்போது சாயக்கழிவு பெருமளவு கலந்திருப்பதாலும், சாக்கடை கலப்பதாலும்  திருமணிமுத்தாறு பெருமளவு மாசடைந்துள்ளது.

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, சேலம் ஆட்சியர் ரோகிணி தலைமையில், சுகாதாரப் பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள், மாணவர்கள் என ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோர் ஆற்றை சுத்தப்படுத்தும் பணியை தொடங்கினர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் ரோகிணி, உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மாவட்டம் முழுவதும் 50 ஆயிரம் மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறினார்.

சாயக்கழிவு நீரை ஆற்றில் கலப்பவர்களை கண்டறிந்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment