குஜராத்தில் இருந்து மீட்கப்பட்ட ராஜராஜ சோழன், உலக மாதேவி சிலைகள் கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு!

இன்று  கும்பகோணம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் குஜராத்திலிருந்து மீட்கப்பட்ட ராஜராஜசோழன், உலகமாதேவி சிலைகள்,  ஒப்படைக்கப்பட்டன.

தஞ்சை பெரியகோயிலிலிருந்து 60 ஆண்டுகளுக்கு முன்னர் திருடப்பட்ட ராஜராஜசோழன், உலகமாதேவி ஐம்பொன் சிலைகள், குஜராத்தில் உள்ள சராபாய் பவுண்டேஷன் – காலிகோ அருங்காட்சியகத்தில் இருந்தது கண்டுபிடிக்கப் பட்டது. அதன்பேரில், சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேல் தலைமையிலான போலீசார், குஜராத் சென்று அவற்றை மீட்டனர்.

ரயில் மூலம் நேற்று சென்னை கொண்டுவரப்பட்ட இவ்விரு சிலைகளும், பலத்த பாதுகாப்புடன் இன்று கும்பகோணத்துக்கு கொண்டுவரப்பட்டது. அங்கு ராஜராஜசோழன், உலகமாதேவி சிலைகளுக்கு பொதுமக்கள் மேளதாளம் முழங்க வரவேற்பு அளித்தனர். சிலைகளுக்கு மலர் தூவி வழிபட்டனர்.

சிலைகடத்தல் தடுப்புப்பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேலுக்கு, அவர்கள் மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் சிலை கடத்தல் குறித்த வழக்குகளை விசாரித்து வரும், கும்பகோணம் குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி ஐயப்பன் முன்னிலையில் சிலைகள் ஒப்படைக்கப்பட்டன. இவ்விரு சிலைகளும் கும்பகோணத்திலிருந்து தஞ்சாவூருக்கு கொண்டுசெல்லப்பட உள்ளன.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment