உ.பி காவல்நிலையத்தில் 14 வயது சிறுமியை 8 நாட்கள் அடைத்து சித்திரவதை!

 தேசிய மனித உரிமை ஆணையம்,14 வயது சிறுமியை கைது செய்து நொய்டா காவல்நிலையத்தில் எட்டு நாட்கள் அடைத்து  வைத்த சம்பவம்  தொடர்பாக  உத்தரப் பிரதேச காவல்துறை தலைவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அச்சிறுமி சிறையில் தாக்கப்பட்டதாகவும், எரியும் சிகரெட்டுகளால் உடலில் சூடு வைக்கப்பட்டதாகவும், மின் கம்பிகளால் ஷாக் கொடுத்ததாகவும் தேசிய மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.

சிறுமி கைது செய்யப்பட்டு சிறையில் துன்புறுத்தப்பட்டது குறித்த அறிக்கையை ஆணையம் முழுமையாக படித்தறிந்து, அவை உண்மையாக இருக்குமேயானால், சம்பந்தப்பட்டவர்களுக்கு அதிகப்பட்ச தண்டனை கிடைக்கும்.

14 வயது சிறுமியை கைது 8 நாட்கள் நொய்டா காவல்நிலையத்தில் அடைத்தது பற்றி ஊடகங்கள் தெரிவித்துவிரும் செய்திகளின் அடிப்படையில் தேசிய மனித உரிமை ஆணையம், தானாக முன்வந்து இவ்வழக்கை எடுத்துக்கொள்கிறது.

உத்தரப் பிரதேச மாநில காவல்துறை தலைவருக்கு மனித உரிமைகள் குறித்த பட்டியலை அளிததுள்ள ஆணையம் நான்கு வாரங்களுக்குள் விரிவான அறிக்கையை அளிக்கும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உரிய உளவியல் சிகிச்சையும் மறுவாழ்வு நடவடிக்கை குறித்த அறிக்கையும் மாநில காவல் துறைத் தலைவரிடமிருந்து எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு ஊடகம் நேற்று சேகரித்த வழங்கிய செய்தியின்படி, இச்சிறுமி ஒரு வீட்டில் வேலை செய்து வந்ததாகவும் அவர் பணியாற்றிவந்த வீட்டில் உள்ளவர்கள் இவர்மீது திருட்டுப்பட்டம் கட்டியதாகவும் கூறப்படுகிறது.

இச்சிறுமியின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் கூற்றின்படி, கடந்த மே 14 அன்று சலார்பூர் காவல்நிலைய காவலர்கள் இப்பெண்ணை கைது செய்துள்ளனர். காவல்நிலையத்தில் மே 16 வரை அடைக்கப்பட்டிருந்ததாகவும் ஆணைய அறிக்கை தெரிவிக்கிறது.

அவர்கள் (சிறுமியின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்) சிறுமியைப் பார்க்க அனுமதிக்கப்படவில்லை. சிறுமி மே 16 அன்று விடுவிக்கப்பட்டார். மறுநாள் இதே போலீஸார் சிறுமியை அவரது 17 வயது சகோதரருடன் கைது செய்தனர். ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம், பச்பான் பச்சவோ அண்டோலன் தலையீடு மற்றும் குழந்தை நல்வாழ்வு கமிட்டியின் உத்தரவுக்கு பிறகு இருவரும் கடைசியாக மே 22 அன்று விடுவிக்கப்பட்டனர்.

குழந்தை நல்வாழ்வு கமிட்டி (சைல்ட் வெல்பேர் கமிட்டி) மே 23 அன்று சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்ய உத்தரவிட்டது.

இச்சிறுமி காவல்நிலையத்தில் வைத்து, வலது, இடது கை மணிக்கட்டுப் பகுதிகளில் சிகரெட்டால் காயப்படுத்தப்பட்டடுள்ளார் என்பதை மருத்துவ சட்ட வழக்கு அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. கடினமான மற்றும் மரக்கட்டைகளால் வலது முழங்கையில் மற்றும் இரண்டு மணிக்கட்டுக்களிலும் ஏற்படுத்தப்பட்ட மூன்று சிராய்ப்புகள் உள்ளன என்றும் இக்காயங்கள் அனைத்தும் 10 நாட்கள் ஆகின்றன என்றும் மருத்துவ அறிக்கை தெரிவிக்கிறது.

நொய்டாவில் உள்ள செக்டர் 39 காவல்நிலையத்தின் உதவி காவல் ஆய்வாளர், சட்டவிரோத கைது மற்றும் சித்திரவதை தொடர்பான குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளார். மேலும் அப்பெண் சிறுமி அல்ல என்றும் தெரிவித்தார்.

ஆணையம் அறியிக்கையின்படி மருத்துவ சட்ட அறிக்கை (மெடிக்கோ லீகல் கேஸ் ரிப்போர்ட்) யில் இப்பெண் சிறுமி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment