அரசியல் அழுத்தம் காரணமாகவே தமிழக முதல்வர் மேகதாது திட்டத்தை எதிர்க்கிறார்…!கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் பரபரப்பு தகவல்

மேகதாது திட்டத்துக்கு விரைவில் தமிழக முதல்வர் அனுமதி அளிப்பார் என்று கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமார் கூறுகையில்,  அரசியல் அழுத்தம் காரணமாகவே தமிழக முதல்வர் மேகதாது திட்டத்தை எதிர்க்கிறார்.மேகதாது திட்டத்துக்கு விரைவில் தமிழக முதல்வர் அனுமதி அளிப்பார்.மேகதாது திட்டத்தால் கிடைக்கும் பயனை புரிந்துகொண்டு விரைவில் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கை தமிழக அரசு திரும்பப் பெறும் என்றும்  கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

Leave a Comment