பேனர் விவகாரத்தில் நடவடிக்கை எடுங்கள் பிரதமரே..! அதுவே உங்களுக்கு பெரிய விளம்பரம் – கமல்ஹாசன் வேண்டுகோள்

பேனர் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வையுங்கள் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னையில் பேனர் விழுந்ததில் சுபஸ்ரீ என்ற இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.   இது தொடர்பான வழக்கில் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது.தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் பேனர்கள் வைக்கக்கூடாது என்று கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியது.
மேலும்  பிரதமர் மோடி – சீன அதிபர் ஜி ஜின்பிங் வருகையின் போது பேனர் வைக்க அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில்  தமிழக அரசு மனு தாக்கல் செய்தது.


இந்த நிலையில் இது குறித்து மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில்,  தமிழகமும், தமிழர்களும் சுபஸ்ரீயின் இழப்பில் இருந்தே இன்னும் மீளாத நிலையில், உங்கள் வருகைக்கு பேனர்கள் வைக்க அரசு நீதிமன்றத்தில் அனுமதி கோரியுள்ளது.பிரதமரான நீங்கள் ஒரு முன்னோடியாக திகழ முதலில் இந்த பேனர் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்;.இது தமிழர்களின் உணர்வை நீங்கள் பிரதிபலிப்பதாக அமையும் என்று ட்வீட் செய்துள்ளார்.