திருப்புவனம் ராமலிங்கம் படுகொலையை கண்டித்து கடையடைப்பு….!!

தஞ்சாவூர் மாவட்டம் பாமக  நிர்வாகி ராமலிங்க படுகொலையை கண்டித்து கடையடைப்பு போராட்டம் நடைபெறுவதால் பொது மக்களின் வாழ்க்கை பாதிக்கக்பட்டடுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்த பாமக பிரமுகர் ராமலிங்கம்.இவர் கடந்த 5_ஆம் தேதி மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார் இந்த கொலை தொடர்பாக காவல்துறை இதுவரை 9 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே ராமலிங்கபடுகொலையை கண்டித்து தஞ்சை மாவட்டத்தில் முழு அடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.இதன் எதிரொலியாக திருபுவனம் , திருவிடைமருதூர் , திருநாகேஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் … Read more

அட்சயநாத சுவாமி கோயில் கிணற்றில் பொங்கி வரும் நீர்…!!

திருவிடைமருதூர் அருகே உள்ள கோயில் கிணற்றில் இருந்து தண்ணீர் பொங்கி வருவதையடுத்து, பக்தர்கள் அதில் நீராடி வருகின்றனர். தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் அருகே திருமாந்துரையில் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான அட்சயநாத சுவாமி கோயில், 3 ஆயிரம் பழமை வாய்ந்தது. சந்திர தீர்த்தம் என்று அழைக்கப்படும் இந்த கோயில் தீர்த்தம் பல்வேறு சிறப்புகளை உடையது. இந்த நிலையில், சந்திர கிணற்றில் இருந்து தண்ணீர் பொங்கி நிரம்பி வருகிறது. பொதுமக்கள், சந்திரதீர்த்தத்தில் நீராடியும், பாட்டில்களில் நீர் சேகரித்தும் செல்கின்றனர். இந்த … Read more

மீட்புபணிக்கு காசு…வீட்டுக்கு 100 கொடுங்க..ஆத்திரத்தில் மக்கள்..!!

கஜா புயல் டெல்ட்டா மாவட்டத்தை பதம் பார்த்துவிட்டு சென்றது.குறிப்பக தஞ்சை , நாகை , திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரும் சேதம் ஏற்பட்டது.விவசாயம் , வீடு , கால்நடைகளை இழந்து மக்கள் கண்ணீருடன் தவித்து வருகின்றனர்.மின்சாரமின்றி , உணவின்றி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். முற்றிலும் வாழ்வாதாரத்தை இழந்த மக்களை மீட்டெடுக்கும் பணியில் அரசு திருப்தியாக செயல்படவில்லை என்று கூறி பல இடங்களில் மக்கள் போராட்டம் நடத்தினர்.சில இடங்களில் காவல்துறை மிரட்டி , தடியடி தாக்குதலுக்கும் ஆளானார்கள் நிவாரணம் … Read more

6 மாணவர்கள் சாவு…மணல் கொள்ளைக்கு இனியாவது முடிவு கட்டுங்கள்..ராமதாஸ் கண்டனம்..!!

தமிழ்நாட்டில் நடக்கும் மணல் கொள்ளைக்கு அரசு முடிவுகட்ட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமாதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்த அறிக்கையில் , தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தை அடுத்த கபிஸ்தலம் கிராமத்தில் காவிரியாற்றில் குளிக்கச் சென்ற 6 மாணவர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளனர். இந்த செய்தியைக் கேட்டதும் நான் பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். ஏராளமான கனவுகளுடன் வளர்த்த குழந்தைகளை இழந்து வாடும் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் … Read more

ரூபாய் 18,00,000 சரக்கு பாட்டில்கள்: கவிழ்ந்த லாரி

தஞ்சை மாவட்டம் அருகே மதுபாட்டில்கள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்த விபத்தில் 18 லட்சம் ரூபாய் மதிப்பிலான மதுபாட்டில்கள் சேதமடைந்தன. சென்னையில் இருந்து தஞ்சைமாவட்டம் நோக்கி  தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கிற்கு மதுபானங்களை ஏற்றிய லாரி சென்றுகொண்டிருந்தது. அப்போது தஞ்சை நோக்கி வந்து கொண்டு இருந்த பொது  தண்டாங்கோரை என்ற இடத்தில் வந்தபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி நிலைதடுமாறி சாலையோர பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்தது. இதில் லாரியில் பின் புறத்திலோ இருந்த ஏராளமான மதுப்பாட்டில்கள் … Read more

தஞ்சையில் குறைதீர் கூட்டத்திற்கு வந்த விவசாயிகள் படுத்து உறங்கும் போராட்டம்

தஞ்சையில் குறைதீர் கூட்டத்திற்கு வந்த விவசாயிகள் படுத்து உறங்கும் போராட்டம் செய்து வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி, ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்தில் படுத்துக் கொண்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.