மீட்புபணிக்கு காசு…வீட்டுக்கு 100 கொடுங்க..ஆத்திரத்தில் மக்கள்..!!

கஜா புயல் டெல்ட்டா மாவட்டத்தை பதம் பார்த்துவிட்டு சென்றது.குறிப்பக தஞ்சை , நாகை , திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரும் சேதம் ஏற்பட்டது.விவசாயம் , வீடு , கால்நடைகளை இழந்து மக்கள் கண்ணீருடன் தவித்து வருகின்றனர்.மின்சாரமின்றி , உணவின்றி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

முற்றிலும் வாழ்வாதாரத்தை இழந்த மக்களை மீட்டெடுக்கும் பணியில் அரசு திருப்தியாக செயல்படவில்லை என்று கூறி பல இடங்களில் மக்கள் போராட்டம் நடத்தினர்.சில இடங்களில் காவல்துறை மிரட்டி , தடியடி தாக்குதலுக்கும் ஆளானார்கள் நிவாரணம் கேட்ட மக்கள்.மீட்ப்புப்பணி , நிவாரணம் என அரசியல்கட்சிகள் ,அண்டை மாவட்டம் , அண்டை மாநிலம் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனம் நிவாரண பணி மற்றும் நிவாரண பொருட்களை அனுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் அரசு சார்பில் மின்சாரத்தை சரி செய்ய வரும் அதிகாரிகள் பணம் வசூல் செய்வதாக பல்வேறு இடங்களில் மக்கள் புகார் அளித்தனர்.இந்நிலையில் தஞ்சை மாவட்டத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட கிராமங்களில் ஒன்றான அதிராம்பட்டினம் பகுதியில் வீடுகளில் உள்ள குப்பைகளை அப்புறப்படுத்த துப்புரவு பணியாளர்கள் வீட்டுக்கு 100 ரூபாய் வசூல் செய்ததாக புகார் எழுந்துள்ளது.இதனால் மக்கள் கடும் ஆத்திரத்தில் உள்ளனர்.மக்களிடம் உணவுக்கே வழியில்லாத போது இப்படி வசூல் செய்வதை கண்டித்தும் , இதுதான் தமிழக அரசின் லட்சண போக்கு என்றும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

DINASUVADU.COM

author avatar
Dinasuvadu desk

Leave a Comment