தமிழக அரசின் அனுமதி இல்லாமல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தொடங்க முடியாது-அமைச்சர் சி.வி.சண்முகம்

ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக அமைச்சர் சி.வி.சண்முகம் பேசினார்.அப்பொழுது  அவர் கூறுகையில், தமிழக அரசின் அனுமதி இல்லாமல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தொடங்க முடியாது .ஹைட்ரோ கார்பன் திட்டம் எந்த வடிவில் வந்தாலும் அனுமதிக்க மாட்டோம், அரசியலுக்காக போராட்டம் நடத்தினால் நாங்கள் எதுவும் செய்ய முடியாது. திட்டத்தை சட்ட ரீதியாக நிறுத்தவும், தடுக்கவும், சம்பந்தபட்டவர்கள் மீறும்போது, நடவடிக்கை எடுக்கவும் நமக்கு உரிமை இருக்கிறது. அப்படி இருக்கும்போது, எதற்காக போராட்டம் நடத்த வேண்டும் என்று தெரிவித்தார்.

அரசின் இலவச திட்டங்களை எதிர்க்கட்சிகள் கொச்சைப்படுத்துகிறது – அமைச்சர் சி.வி.சண்முகம்….!!

தமிழக அரசின் திட்டங்களையும், இலவசங்களையும் எதிர்க்கட்சிகள் கொச்சைப்படுத்தி வருவதாக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றம்சாட்டி உள்ளார். விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் மாவட்ட ஆட்சியர் சுப்ரமணியன் தலைமையில் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் சிவி.சண்முகம், 351 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், உடல் நிலை சரியில்லாத போதும், சோதனைகள் அனைத்தையும் எதிர்கொண்டு, அத்தனை திட்டங்களையும் நிறைவேற்றியவர் ஜெயலலிதா என்று குறிப்பிட்டார். தமிழக மக்களின் முன்னேற்றத்திற்காக, பல்வேறு … Read more

கோடநாடு கொலை வழக்கில் எங்களுக்கு எந்த பயமும் இல்லை-அமைச்சர் சி.வி.சண்முகம்

கோடநாடு கொலை வழக்கில் எங்களுக்கு எந்த பயமும் இல்லை என்று அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் சி.வி.சண்முகம் கூறுகையில்,  கொடநாடு விவகாரத்தில் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த சிலர் முயற்சிக்கிறார்கள்.ஆதாரங்கள் இருந்தால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.கோடநாடு கொலை வழக்கில் எங்களுக்கு எந்த பயமும் இல்லை என்று அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.