மூளையில் நோய்களை எதிர்த்து போராட உதவும் சிப்.!

பிரையன் ஜான்சனுடைய கெர்னல் நிறுவனம் (Bryan Johnson's firm, Kernel), மூளையில் பொருத்தப்படும்

By Dinasuvadu desk | Published: Mar 14, 2018 06:41 PM

பிரையன் ஜான்சனுடைய கெர்னல் நிறுவனம் (Bryan Johnson's firm, Kernel), மூளையில் பொருத்தப்படும் ஒரு மைக்ரோ சிப்பை (Brain Chip - Micro) உருவாக்கி வருகின்றது. இந்த‌ சிப்களை வைத்து மக்கள் வேண்டுமென்றபோது நினைவுகளை வாங்கவும், அழிக்கவும் அனுமதிக்கும். பணக்காரர்களுக்கென்று மாத்திரம் ஒதுக்கப்படாமல், இந்த‌ சிப்கள் 'ஸ்மார்ட்ஃபோன்களைப் போலவே அனைவரும்' பெறமுடியும் என‌ பிரையன் ஜான்சன் கூறுகிறார்.
நீங்கள் மூளையில் சேமித்த‌ நினைவுகளை அழிக்கவும் மற்றும் நோய்களை எதிர்த்து போராடவும் செய்ய‌ வைக்கின்ற‌ பிரெயின் சிப்பானது இன்னும் 15 ஆண்டுகளில்  ஒரு புதிய இனத்தை உருவாக்க உள்ளது.மனித மூளையில் இந்த மைக்ரோ சிப்களை பொருத்துவதன் மூலம் மனிதனின் செயல் திறன் பன்மடங்கு அதிகரிக்கும் என்று கெர்னல் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. மனித மருத்துவ பயன்பாட்டிற்காக‌, மூளையில் பொருத்தப்படும் சாதனங்களின் முன்மாதிரிகளை கர்னல் தற்போது செய்து வருகிறது. வலிப்பு நோயாளிகளுடன் சோதனைகள் நடத்தி நல்ல ஆரம்ப முடிவுகளை பெற்றுள்ளது.மேலும் இந்த‌ சிப்களை பொருத்தும் தொழில் நுட்பத்தினை வ‌ணிகமயமாக்கும் (Brain Chip Implant Technology) நோக்கத்துடன் முன்னோக்கி செல்ல உள்ளதாகவும் , ஆரோக்கியமான மக்களிடம் சென்றடையும் முன்னர் , அல்சைமர் (Alzheimer) போன்ற மூளைச் சிதைவு நோய்களால் பாதிக்கப்பட்ட மக்களில் நினைவகத்தை மேம்படுத்துவதற்கு இந்த‌ சிப்கள் ப‌யன்படுத்தப்படுமென நம்புவதாக‌ பிரையன் ஜான்சன் கூறுகிறார். மேலும் தகவலுக்கு இணைந்திடுங்கள் தினச்சுவடு. Chip to fight diseases in the brain
Step2: Place in ads Display sections

unicc