அரசு முறைப் பயணம் வெற்றிகரமாக முடிந்துள்ளது"/> அரசு முறைப் பயணம் வெற்றிகரமாக முடிந்துள்ளது"> அரசு முறைப் பயணம் வெற்றிகரமாக முடிந்துள்ளது"/>

அரசு முறைப் பயணம் இனியும் தொடரும்-முதலமைச்சர் பழனிசாமி 

அரசு முறைப் பயணம் வெற்றிகரமாக முடிந்துள்ளது

By Fahad | Published: Apr 01 2020 02:09 AM

அரசு முறைப் பயணம் வெற்றிகரமாக முடிந்துள்ளது என்று முதலமைச்சர் பழனிசாமி   தெரிவித்துள்ளார்.
அரசு முறை பயணமாக முதலமைச்சர் பழனிசாமி  இங்கிலாந்து,அமெரிக்கா மற்றும் துபாய் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.தனது 13 நாட்கள் பயணத்தை முடித்துக்கொண்டு  முதலமைச்சர் பழனிசாமி  சென்னை திரும்பினார்.அப்பொழுது சென்னை விமான நிலையத்தில் முதலமைச்சர் பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,  கார் உற்பத்தி தொழிற்சாலைகள் தமிழகத்திற்க்கு வர உள்ளன.கிங்ஸ் மருத்துவமனை கிளை சென்னைக்கு வர ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அரசு முறைப் பயணம் வெற்றிகரமாக முடிந்துள்ளது.சுற்றுலாவை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. வெளிநாடு வாழ் தமிழர்களை ஒன்றிணைக்க யாதும் ஊரே என்னும் திட்டம் துவங்கபட்டுள்ளது.40 க்கும் மேற்ப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. புதிய திட்டங்கள் மூலம் தமிழகம் வளர்ச்சிப் பாதையில் செல்லும் . எரிச்சல், பொறாமையால் தான் எதிர்ப்புக் குரல் வருகிறது.வெளிநாடு வாழ் தமிழர்களின் வரவேற்பு மகிழ்சியை தந்தது. தமிழ்நாட்டில் தொழில் முதலீடு செய்ய பலரும் ஆர்வம்.அரசு முறைப் பயணம் மேலும் தொடரும் என்றும் தெரிவித்தார்.                                                                                            

More News From Chief Minister Edappadi K Palanisamy