மு.க.அழகிரி வீட்டில் குவியும் தொண்டர்கள் …!நெருங்கும் திமுக தலைவர் தேர்தல் …!தீவிர ஆலோசனையில் அழகிரி படை

மதுரையில் மு.க. அழகிரி தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
கடந்த 7 ஆம் தேதி தி.மு.க தலைவர் கலைஞர் கருணாநிதி காலமானார்.பின்னர் ஆகஸ்ட் 8 ஆம் தேதி மெரினாவில் அரசு மரியாதையுடன் திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இதன் பின் மெரினாவில் அஞ்சலி செலுத்தியவுடன் மு.க.அழகிரி கூறுகையில், கருணாநிதியின் விசுவாசமான உடன்பிறப்புகள் என் பக்கம் தான் உள்ளனர.என்னுடைய ஆதங்கம் குடும்பத்தை பற்றியது அல்ல, கட்சியை பற்றியது.என்னுடைய ஆதங்கத்தை அப்பாவிடம் தெரிவித்துள்ளேன் என்று பரப்பராக கூறினார்.
ஆனால் திமுக தலைவர், பொருளாளர் பதவிகளுக்கு போட்டியிட விரும்புவோர் வரும் 26ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இதேபோல் மு.க.அழகிரி தலைமையில் செப்டம்பர் 5 ஆம் தேதி மறைந்த முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்துக்கு அமைதி பேரணி நடத்த உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டார்.
அவர் கூறுகையில், என்னை இணைப்பதாக தெரியவில்லை என்று மு.க. அழகிரி தெரிவித்துள்ளார்.மேலும் அவர் கூறுகையில், செப்டெம்பர் 5ஆம் தேதி பேரணிக்கு பிறகு அடுத்தக்கட்ட முடிவை அறிவிப்பேன். நேரம் வரும் போது எனது ஆதங்கத்தை வெளிப்படுத்துவேன்.அமைதி பேரணியில் ஒரு லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என்றும் தெரிவித்தார்.
நேற்று மீண்டும் அவர் கருத்து ஒன்றை தெரிவித்தார்.செப்டம்பர் 5ல் நடக்கும் பேரணியில் கலந்து கொள்ள எந்த தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கவில்லை. என்னை பொறுத்தவரை தொண்டர்கள்தான் தலைவர்கள். மதுரையில் நாளை தொண்டர்களை சந்திக்கிறேன்.நேரம் வரும் போது ஆதங்கத்தை வெளிப்படுத்துவேன். சென்னை பேரணிக்கு பின்னர், அடுத்தக்கட்ட முடிவை அறிவிப்பேன் என்றும் கூறியுள்ளார்.
இந்நிலையில் மதுரை சத்ய சாய்நகர் வீட்டில் ஆதரவாளர்களுடன் மு.க.அழகிரி ஆலோசனை ஈடுபட்டுள்ளார். மதுரை, நெல்லை, குமரி, சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட தென்மாவட்டங்களை சேர்ந்த ஆதரவாளர்கள் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.மேலும் தொண்டர்கள் வந்த வண்ணமே உள்ளனர். அதில், செப்டம்பர் 5ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ள அமைதி பேரணியில், பலத்தை காட்டும் வகையில், கூட்டத்தை திரட்டுவது குறித்தும், தி.மு.க., பொதுக்குழுவில், ஸ்டாலினுக்கு எதிராக, போர்க்குரல் எழுப்புவது குறித்தும், ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.
DINASUVADU

Leave a Comment