UAE : ரூ.700 கோடி கொடுப்பதாக நாங்க சொல்லவே இல்ல..!ஐக்கிய அமீரகம் திடீர் பல்டி..!

இந்தியாவுக்கான ஐக்கிய அமீரக தூதர் அஹ்மத் அல்பன்னா கேரளா வெள்ளத்துக்கு நிவாரண நிதியாக 700 கோடி அளிப்பதாக சொல்லவில்லை என இந்திய ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
கேரளாவில் பெய்து வரும் கனமழை வெள்ளத்துக்கு ரூ.700 கோடி ஐக்கிய அமீரக இளவரசர் வழங்க உள்ளதாக தெரிவித்தார் கேரளா முதல்வர் பினராயி விஜயன்.இந்நிலையில் மத்திய அரசு வெளிநாடுகளிலிருந்து  நிதியை வாங்க கொள்கையை முன் நிறுத்திய நிலையில் கேரள முதல்வர் அப்படியனால் நீங்களே      ரூ.700 கோடி கொடுங்கள் என்றார்.
Related image
மத்திய அரசுக்கும்-கேரள முதல்வருக்கும் வார்த்தை போர் நடந்த நிலையில் தற்போது அமீரக இந்திய தூதர் கூறிய தகவல் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.மேலும் 700கோடி அறிவித்த அமீரகத்திற்கு பிரதமர் நன்றி தெரிவித்து ட்விட் செய்த நிலையில் தற்போது தூதரின் இந்த அறிவிப்பு பெரும் குழப்பத்தையும்,அரசியல் ஊடுருவி உள்ளதும் தெரிகிறது.700 கோடி அமீரக வழங்க உள்ளதாக அறிவித்த கேரள முதல்வர் என்ன கூறுகிறார் என்று பொறுத்து தான் பார்க்க வேண்டும்.
DINASUVADU

author avatar
kavitha

Leave a Comment