திருச்செந்தூர் கோவில் பிரசாதத்தில் கெட்டுப்போன உணவு பொருட்கள்-மக்கள் அதிர்ச்சி

 

 

திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் உள்ள கடைகளில் வாங்கும் பிரசாத பொருட்களில் கெட்டுப்போன நிலையில் விற்பனை செய்யப்படுவதாக பக்தர்கள் புகார் அளித்துள்ளனர். தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை என்பதாலும் மார்கழி மாதம் என்பதாலும் இங்கு தினத்தோரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் வந்து சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இங்கு வரும் பக்தர்கள் அரிசிமாவுடன் சர்க்கரை வெள்ளம் கலந்து செய்யப்படும் ‘புட்டமுது’ என்னும் பிரசாத பொருளினை விரும்பி வாங்கி செல்வது வழக்கம். அவ்வாறு வாங்கும் அந்த மாவு பொருளில் இருந்து துர்நாற்றம் வீசியதாகவும், அதை சாப்பிட்ட பலருக்கு வாந்தி மயக்கத்துக்கு ஆளானதாகவும் கூறப்படுகிறது. கடந்த 9-ம் தேதி தயாரிக்கப்பட்ட இந்த மாவு பொருட்களில் 3 மாதத்திற்கு கெட்டுபோகாது என ஸ்டிக்கர் ஒட்டி இருந்தது கூடுதல் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது.
உணவுப்பொருள் ஒழுங்குமுறை சட்டம் 2011-ன் படி பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவு பொருளில் ஸ்டிக்கர் ஓட்டுவது சட்டப்படி குற்றமாகும். எனவே, கோயிலில் உள்ள பிரசாத ஸ்டால்களில் உள்ள பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவு பொருட்கள் குறித்து தீவிர சோதனை நடத்தி கோயிலுக்கு வரும் பக்தர்களின் உடல் நலன் காக்க திருச்செந்தூர் உணவுப்பொருள் பாதுகாப்பு துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment