குட்கா ஊழல் …!தயாரிப்பு நிறுவன அதிபர் பி.வி.சீனிவாச ராவ் அதிரடி கைது …!

குட்கா முறைகேடு வழக்கில் குட்கா தயாரிப்பு நிறுவன அதிபர் பி.வி.சீனிவாச ராவை கைது செய்தது சிபிஐ.

நேற்று குட்கா விவகாரம் தொடர்பாக தமிழகத்தில் 40 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.குட்கா விற்பனையாளர் மாதவராவின் வீட்டில் கிடைத்த டைரியின் அடிப்படையில் ரெய்டு நடைபெற்றது.

இதன் காரணமாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு ,முன்னாள் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் வீடுகளிலும் ,தமிழக டி.ஜி.பி டி.கே.ராஜேந்திரன் வீடு, முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா வீட்டிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

இந்நிலையில் குட்கா வழக்கில் சிபிஐ நடத்திய சோதனையின் முடிவில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் .அதில் குட்கா குடோன் நிறுவன உரிமையாளர ஏ.வி மாதவ ராவ், உமா சங்கர் குப்தா, பாண்டியன், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில் முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே இன்று காலை குட்கா ஊழல் வழக்கில் ராஜேஷ், நந்தகுமார் ஆகிய இரு இடைத்தரகர்கள் இன்று கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் குட்கா முறைகேடு வழக்கில் குட்கா தயாரிப்பு நிறுவன அதிபர் பி.வி.சீனிவாச ராவை கைது செய்தது சிபிஐ.இதுவரை ஊழல் தொடர்பாக 7 பேரை கைது செய்தது.

Leave a Comment