ஐபிஎல்லில் டாப் ஆர்டர் வரிசையில் பேட்டிங் கேட்ட தோனி!மறுத்தது யார் ?தோனி விளக்கம்

3-வது முறையாக  ஐபிஎல் 11-வது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கோப்பையை கைப்பற்றியது. அந்த அணியின் பெரும்பாலான வீரர்கள் 30 வயதை கடந்தவர்கள். திறமையை வெளிப்படுத்த வயது ஒரு தடையில்லை என்பது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிரூபித்து காட்டியது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டனான டோனி லோ-ஆர்டர் பேட்ஸ்மேன் வரிசையில் களம் இறங்கி அசத்தினார். அவர் 16 போட்டியில் 455 ரன்கள் குவித்தார். இதில் மூன்று அரைசதங்கள் அடங்கும். 36 வயதாகும் எம்எஸ் டோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் லோ-ஆர்டர் பேட்ஸ்மேனாக களம் இறங்குவது எனக்கு புதைமணலில் ஓடுவது மாதிரி என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து எம்எஸ் டோனி கூறுகையில் ‘‘நான் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, சில வருடத்திற்கு முன்பு பிட்னஸ் பேச்சு தொடங்கியது. இந்த ஐபிஎல் தொடருக்கு வரும்போது, நான் எனது அணியுடன் உட்கார்ந்து பிட்னஸ் குறித்து பேசினேன். அப்போது நான் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் வரிசையில் களம் இறங்குவேன். வயது காரணமாக நான் லோ-ஆர்டர் வரிசையில் களம் இறங்கி பேட்டிங் செய்வது புதைமணலில் இறங்குவது போன்றதாகும் என்பதில் உறுதியாக இருந்தேன்.

போட்டியை வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற பொறுப்பை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்பினேன். அந்த முடிவில் உறுதியாகவும் இருந்தேன். ஆனால், நான் லோ-ஆர்டர் வரிசையில் இறங்கி விளையாடி கொண்டிருந்தபோது, எனக்கு நானே போதுமான நேரத்தை கொடுக்க முடியவில்லை.

இப்படி இறங்கும்போது நான் புதைமணலில் ஓடுவது போன்றதும், அதிகப்படியான படபடப்பிற்கும், ரொம்ப ஆழமாகவும் செல்ல வேண்டிய நிலை இருந்தது. அதனால் டாப் ஆர்டர் வரிசையில் பேட்டிங் செய்ய வாய்ப்பு கொடுக்கும்படி கேட்டேன். நான் 3, 4 அல்லது ஐந்தாவது இடத்தில் களம் இறங்க விரும்பினேன். அப்படி என்றால், ஏராளமான ஓவர்கள் கிடைக்கம்’’ என்றார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment